ஜெயலலிதாவின் குட் வில் புக்கில் இருந்த சத்தியபாமாவுக்கு கல்தா! செங்கோட்டையனின் ஆதரவாளர்! யார் இவர்?
சென்னை: தமிழக அமைச்சரவையில் 23 பேர் பதவியேற்கும் நிலையில் அதில் முன்னாள் எம்பியான சத்தியபாமாவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் முதல்வராக கடந்த மே 10ஆம் தேதி விஜய் பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்றனர். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அது போல் அமைச்சரவை எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் இன்றைய தினம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதில் புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்கிறார்கள்.
21 பேர் தவெகவினர், 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
தூத்துக்குடி தொகுதியின் ஸ்ரீநாத், அவிநாசி கமலி, குமாரபாளையம் விஜயலட்சுமி, காஞ்சிபுரம் ரஞ்சித் குமார், கும்பகோணம் வினோத், திருவாடாணை- ராஜீவ், கடலூர் ராஜ்குமார், அரக்கோணம் காந்திராஜ், ராஜபாளையம் ஜெகதீஸ்வரி, ஈரோடு கிழக்கு- விஜய் பாலாஜி, ராசிபுரம் லோகேஷ் தமிழ்ச்செல்வன், ஸ்ரீரங்கம் ரமேஷ், ஒட்டபிடாரம்- மதன் ராஜா, கிள்ளியூர்- ராஜேஷ்குமார், சேலம் தெற்கு விஜய் தமிழன் பார்த்திபன், மேலூர் விஸ்வநாதன், வேளச்சேரி ஆர் குமார், ஸ்ரீபெரும்புதூர் தென்னரசு, கோவை வடக்கு சம்பத் குமார், அறந்தாங்கி முகமது பர்வேஸ், தாம்பரம் சரத்குமார், ஆர் கே நகர் மரியவில்சன், கிணத்துக்கடவு விக்னேஷ் ஆகியோர் பதவியேற்கிறார்கள்.
இந்த நிலையில் அதிமுகவில் எம்பியாக இருந்த சத்தியபாமாவுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை. அதிமுகவில் செங்கோட்டையனின் உடன்பிறவா சகோதரி போல் பயணித்து வந்தார்.
பின்னர் அவர் அங்கு ஒருங்கிணைந்த அதிமுக என கோஷமிட்ட போதும் உடனிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட போது சத்தியபாமாவும் நீக்கப்பட்டார். இதையடுத்து செங்கோட்டையனுடன் சத்தியபாமா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துவிட்டனர். சத்தியபாமாவுக்கு திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவரும் வென்றார்.
முதல் பட்டியலிலேயே அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வழங்கப்படவில்லை. தற்போது சத்தியபாமா யார் என்பதை பார்க்கலாம்.
அரசியல் பின்னணி: ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலத்தில் அதிமுகவில் முக்கியத் தலைவராக உருவெடுத்தார்.
நாடாளுமன்றப் பதவி (2014 - 2019): கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளராக திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 16-வது மக்களவையில் எம்பியாகப் பணியாற்றிய இவர், நாடாளுமன்ற விவாதங்களில் திருப்பூர் பின்னலாடைத் துறை மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்துப் பலமுறை பேசியுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கம் (2025): அதிமுகவின் மூத்த தலைவர் கே. ஏ. செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சத்தியபாமா, கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். பணம் உள்ளவர்களுக்கே கட்சியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அவர் தலைமை மீது குற்றச்சாட்டு வைத்தார்.
தற்போதைய அரசியல் நிலை (த.வெ.க.): அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சில நாட்களிலேயே, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) கட்சியில் இணைந்தார். தற்போது த.வெ.க.வின் முக்கியப் பெண் முகங்களில் ஒருவராகச் செயல்பட்டு வருகிறார்.
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications