சென்னைக்கு வந்தால் அப்பா 1 நாள் கூட இருக்கமாட்டார்! ஊர் தான் அவருக்கு எல்லாமே! -விஜயபாஸ்கர்
சென்னை: சென்னைக்கு வந்தால் தனது அப்பா 1 நாள் கூட தங்கள் வீட்டில் இருக்க மாட்டார் என்றும் ஊர் தான் அவருக்கு எல்லாமே எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அந்தளவுக்கு மாடு, கன்று, விவசாயம், ஊர், என தனது தந்தை உழைத்துக்கொண்டே இருப்பார் என்றும் சென்னையில் வீட்டில் சும்மா இருப்பது அவருக்கு பிடிக்காது எனவும் கூறியுள்ளார். தாங்கள் ஒரு நாளாவது இருந்துவிட்டு ஊருக்கு போகுமாறு எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும் அவர் கேட்கமாட்டார் எனக் கூறியிருக்கிறார் விஜயபாஸ்கர். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

1984ஆம் ஆண்டே எம்.ஜி.ஆரால் சீட் கொடுக்கப்பட்டு சேர்மன் ஆனவர் தனது தந்தை சின்னத்தம்பி என்றும் இன்று வரை தனது அப்பாவை ஊர்க்காரர்கள் சேர்மன் என்று தான் அழைப்பார்கள் எனவும் பெருமிதம் தெரிவித்த அவர், இப்போது தான் தன்னை அமைச்சர் என்று அழைக்கிறார்கள், இதற்கு முன்னதாக தன்னையும் சேர்மன் மகன் என்று தான் ஊரில் அழைப்பார்கள் எனக் கூறியுள்ளார். அதேபோல் ஊரில், சொந்த பந்தங்களில் ஏற்படும் சின்னச்சின்ன குடும்ப பிரச்சனைகளை சமரசம் பேசி உடனே சேர்த்து வைத்துவிடுவார் தனது தந்தை என மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருக்கும் போதோ, புதுக்கோட்டையில் இருக்கும் போதோ சைக்கிளில் தன்னால் செல்ல முடியாத சூழல் இருப்பதால், இலுப்பூர் பக்கம் வந்தால் மட்டும் எப்போதுமே சைக்கிளில் தான் பயணிப்பேன் எனவும் கூறியுள்ளார். தாம் பிறந்ததே இலுப்பூர் அரசு மருத்துவமனையில் தான் என்று கூறிய அவர், தாம் வளர்த்த கொம்பன் காளை குறித்த நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறார்.
விராலிமலை சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கேட்டு தம்பிதுரைக்கு எதிராக கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிடம் விருப்பமனு கொடுத்தவர் விஜயபாஸ்கர் தந்தை சின்னத்தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications