கையில குச்சி வேற.. அதைவிடுங்க.. சுப்பிரமணியனை பாத்தீங்களா.. ஜப்பான் போயிகூட அதை விடலயே.. சபாஷ் மா.சு
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜாக்கிங் வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. திமுகவினர் அதை ஷேர் செய்தும் வருகிறார்கள்.. என்ன காரணம்?
அரசியலையும் தாண்டி சிறந்த தடகள வீரராக திகழ்பவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்... 12 நாடுகள், 111 மாரத்தான் போட்டிகள் என இன்றைய இளைய தலைமுறையினருக்கே சவால் விடும் அளவுக்கு சாதனைகளை படைத்தவர்..
எப்போதுமே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தருபவர்.. 2 வருடங்களுக்கு முன்பு அதாவது தொற்று உச்சத்தில் இருந்தபோதுகூட தன்னுடைய உடற்பயிற்சிகளை விடாமல் செய்து அசத்தியவர்.

ஜாக்கிங்
அந்த நேரத்தில், வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றை சாலைகளில் மேற்கொள்ள முடியாது என்பதால், அவர் வீட்டு மொட்டை மாடியிலேயே "8 வடிவ ஓடுதளத்தை" அமைத்து, 4 மணி நேரம் கேப் விடாமல், அதாவது 4 மணி நேரம் 8 நிமிடம், 18 விநாடி, 1010 முறை ஓடி சாதனை படைத்து ஆச்சரியத்தை கிளப்பியவர். இவர்தான் இப்படி இருக்கிறார் என்று பார்த்தால், இவர் பேரனும் இவரை போலவே இருக்கிறார்.. அவரும் மாரத்தான் ஓடுகிறாராம்.. இந்த விஷயம் மா.சு சொல்லிதான் நமக்கே தெரியவந்தது.. அது சம்பந்தமாக ஒரு ட்வீட்டையும் 2 வருடங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார்.

தாத்தா பூரிப்பு
அதில், "தாத்தாவாகிய நான் 50 வயதுக்கு பிறகு தான் மாரத்தான் போட்டிகளில் பதக்கங்கள் பெறத் தொடங்கினேன்... ஆனால் என் பேரன் இன்பன் 5 வயதாகும் முன்னரே பதக்கம் பெற தொடங்கிவிட்டான்...." என்று பூரித்து பதிவிட்டிருந்தார். இங்கே இன்னொரு சம்பவத்தையும் நினைவூட்ட வேண்டி உள்ளது.. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது சுகாதாரத்துறை 24 மணி நேரமும் களத்தில் இறங்கி தீவிரமான பணியை மேற்கொண்டிருந்தது.. அப்போது, மா.சுப்பிரமணியன் நேரடியாகவே மாவட்டங்களில் ஆய்வு சென்றிருந்தார்.. இந்த ஆய்வுகளில் சில ரிஸ்க்கான பயணங்களையும் மேற்கொண்டிருந்தார்.

மூக்கன்கரை
அதில் ஒன்றுதான், கிருஷ்ணகிரி பெட்ட முகிலாலம் ஊராட்சியாகும்.. இதற்காக, இங்குள்ள கோட்டையூர் கொல்லை என்ற மலை கிராம ஊராட்சி நடுநிலை பள்ளியில் இரவு தங்கி, மறுநாள், கொடகரை, காமகிரி, மலைக்கிராமங்களில் ஆய்வு செய்தார்... அதற்கு பிறகு, கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்ய, மூக்கன்கரை மலைக்கிராமத்துக்கு செல்ல முடிவு செய்தார்.. ஆனால், இந்த மூக்கன்கரை மலைக்கிராமமானது, சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.. இந்த கிராமத்துக்கு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் செல்ல வேண்டும்..

குச்சியுடன் ஜாக்கிங்
பாதையும் சரியாக இல்லை.. அதனால் கையில் ஒரு கம்புடன் அமைச்சர் வனப்பகுதிக்குள் நடந்தார். அந்த மலைக்கிராமத்தில் வீடு, வீடாக சென்று, கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த மூக்கன்கரை மலைப்பகுதியானது யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியாம்.. அதனால், காட்டுக்குள் நுழையும்போதே, கையில் ஒரு பெரிய குச்சியுடன்தான் சென்றார்.. இதுவரை மலை கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் கூட யாரும் வந்து போகாத நிலையில், திடீரென சுகாதாரத்துறை அமைச்சரை பார்த்ததும் மலைகிராம மக்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டனர்..

யூனிபார்ம்
ஆசனூர், தாளவாடி மலைப்பகுதியில்கூட, ஜாக்கிங் செய்வதை அமைச்சர் நிறுத்தவில்லை என்பதுதான் ஹைலைட்டே.. ஆசனூர் பகுதியில், புலி சிறுத்தை போன்றவை நடமாடி கொண்டே இருக்குமாம். அதனால், பாதுகாப்பு கருதி, துப்பாக்கிய ஏந்திய அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளும் அமைச்சருடன் துப்பாக்கியுடனேயே ஜாக்கிங் செய்த வீடியோக்களும் அப்போது வெளியாகி இருந்தன.. சுப்பிரமணி, ரெட் கலர் டி-ஷர்ட்டில் ஜாக்கிங் செய்ய, வனத்துறை அதிகாரிகள், யூனிபார்மிலேயே பின்னால் ஜாக்கிங் செய்த அந்த வீடியோ பலருக்கும் ஆச்சரியத்தை கிளப்பியது.

முத்திரை
இப்போது விஷயம் என்னவென்றால், ஜப்பான் போயிகூட, சுப்பிரமணி ஜாக்கிங்கை விடலையாம்.. கடந்த 5 நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர். ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை மற்றும் மேலாண்மை நெறிமுறைகளை அறிந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார்.. டோக்கியோவில் 6 டிகிரி செல்சியஸ் குளிரில் ஜாக்கிங் ஓடிக் கொண்டிருக்கிறார்.. இந்த வீடியோவையும் சுப்பிரமணி, ஷேர் செய்துள்ளார்.. ரெட் கலர் டி-ஷர்ட் - பிளாக் கலர் பேண்ட் அதாவது "முத்திரை"யுடன் கலக்கலாக காணப்படுகிறார். பொதுவாக, ஒரு அரசியல்வாதிகள், தங்கள் உடற்பயிற்சியில் இவ்வளவு கவனம் செலுத்தாத நிலையில், எப்போதுமே ஒரு ஆகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறார் நம்முடைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications