Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AC இல்லாட்டி என்ன.. படுக்கையறையில் ஜில் ஜில்.. ரூமெல்லாம் குளிரும் ஃபேன் காற்று.. இது சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏசி, பேன் இல்லாமலேயே நம்முடைய வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியுமா? இதற்கு என்ன செய்ய வேண்டும்?

கோடை வெயில் வாட்டிக்கொண்டிருக்கிறது.. இதனால் எப்போதுமே ஃபேன், ஏசி-யிலேயே இருக்க வேண்டிய நிலைமை மக்களுக்கு உள்ளது.. ஆனால், நடுத்தர மற்றும் வெகுஜன மக்களுக்கு ஏசி என்பது இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால், ஃபேன் காற்றையே நம்பியிருக்க வேண்டி நிலைமை வருகிறது.

Excellent tips for Room Cool without Using AC and what are the Best Summer tips to cool our House without Air-condition

வெப்பம்: ஆனால், நம் வீடு வெப்பமாக இருப்பதற்கு முக்கிய காரணமே இந்த ஃபேன் காற்றுதான்.. காரணம், வெயிலின் தாக்கம் மொட்டை மாடி வழியாக ஃபேனில் இறங்குகிறது.. இதனால் ஃபேன்காற்றும் அனலாகேவே இருக்கிறது.. மொட்டை மாடியில் வெப்பம் தணியும்போதுதான், அனலும் மெல்ல தணிகிறது.. ஆனாலும், மொட்டை மாடி அளவுக்கு வீட்டிற்குள் குளிர்ச்சி இருப்பதில்லை.

இந்த பிரச்சனைக்கு ஒரே வழி, மொட்டை மாடியில் வெயில் அதிகமாக படுவதை தவிர்க்க வேண்டும்.. இற்கு சுண்ணாம்பு அல்லது வெள்ளை கலர் பெயிண்ட்டை அடிப்பதன்மூலம் ஓரளவு வெயிலை தடுக்கலாம்.. ஆனால், ஒயிட் வாஷ் செய்வது தற்காலிக தீர்வுதான்.

மொட்டை மாடி: அதேபோல, மாடியிலேயே தென்னை ஓலைகளை கொண்டு பசுமை குடில் அமைக்கலாம்.. அதிக வெயிலுக்கு தென்னை ஓலை தீப்பிடித்துவிடும் என்பதால், அடிக்கடி தண்ணீர் ஊற்றி வரவேண்டும்.. கனமான போர்வைகளை தண்ணீரில் நனைத்து, ஜன்னல்கள், வாசற்படிகளில் தொங்க விடலாம்..

இதனால் ஜன்னலின் வெளிப்புறத்தில் ஆவியாதல் நடக்கும். அதாவது, இயற்பியல் விதிப்படி, ஒருபுறம் ஆவியானாலும், இன்னொருபக்கம் குளிருதலும் நடக்கும். அதேபோல, சீலிங் பேனுக்கு பதில், ஃடேபிள் பேனை பயன்படுத்தினால், காற்றின் அனல் குறைவாக கிடைக்கும்.. மாலை நேரங்களில், படுக்கும் தரையில் நீர் தெளித்து வைக்கலாம்.. அதுவும் நான்கைந்து முறை, நீர் தெளித்தால் மட்டுமே தூங்கும்போது, தரைப்பகுதி ஜில்லென்றிருக்கும்..

ஜன்னல்கள்: அதேபோல, ஒரு அகலமான பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை போட்டு, தண்ணீரையும் ஊற்றி நிரப்பி, ஃபேனுக்கு கீழ் வைத்துவிட்டால், குளிர்ந்த நீர் அந்த அறை முழுவதும் பரவும்.. அதேபோல, வெப்பத்தை குறைப்பதற்கான சிறந்த வழி, பகலில் குளிர்ச்சியான நேரத்தில் சமைப்பதாகும்.

வெப்பத்தை அதிகளவு உமிழக்கூடிய மின் சாதனங்களை அதிகளவு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.. முடிந்தவரை வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க எல்இடி விளக்குகளை பயன்படுத்தலாம்.

ஜன்னல்கள்: காற்றோட்டத்தை அதிகப்படுத்த ஜன்னல்களை திறந்து வைத்து வைப்பதுடன், ஸ்கிரீன்களையும் இளம் நிறத்தில் போடும்போது கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்... தென்னம் ஓலை, பனை ஓலை, வெட்டி வேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை ஜன்னல்களில், பால்கனிகளில் தொங்கவிட்டால், வீட்டின் உள்பகுதி குளிர்ச்சியாகும்.

நாம் தினசரி பயன்படுத்தும் மிக்சி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், ஃபேன், அயர்ன்பாக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களின் பிளக்கை பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் அன்பிளக் செய்து வைக்கவும். சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தாலும், சாக்கெட்களில் சொருகியிருக்கும் எந்த பிளக்கும் வெப்பத்தை உருவாக்கவே செய்யும்....வெப்பத்தையும் மின்செலவையும் குறைக்க அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட தரமான மின் சாதனைகளை பயன்படுத்தலாம்..

வீட்டில் பல்பு தேவையில்லாமல் எரிந்தாலோ, கம்ப்யூட்டர், ஃபிரிஜ் போன்ற மின் சாதனப்பொருட்கள் தேவையில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாலோ அதை அணைத்து வைகக வேண்டும்.. அவை வெப்பத்தை வெளியேற்றக்கூடியவை..

பழங்கள்: நம்முடைய உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.. தர்பூசணி, கிர்ணி பழம், முலாம் பழம், வெள்ளரிக்காய் போன்ற நீர் நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சம் பழச்சாறு, மோர் அடிக்கடி குடித்து வரலாம்..

குட்டி குட்டி கிண்ணங்களில் தண்ணீர் நிரப்பி, அதில் கூழாங்கற்களைப் போட்டு வைத்தாலும் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.. வீட்டில் தேவையற்ற மர சாமான்கள், பழைய பாத்திரங்கள், உபயோகப்படுத்தாத பொருட்கள் போன்றவை குவித்து வைத்திருந்தால் அவற்றை உடனே நீக்க வேண்டும்..

காற்று எந்த அளவுக்கு உள்ளே வருகிறதோ, அவ்வளவும் குளிர்ச்சி கிடைக்கும். மண்தரை உள்ள இடங்களை மாட்டு சாணம் வைத்து மெழுகினால், குளிர்ச்சி கிடைப்பதுடன், கிருமிகளும் வீட்டுக்குள் வராமல் இருக்கும்..

மண்தரை: கிச்சன், பாத்ரூமில் உள்ள எக்ஸ்ஹாஸ்ட் மின்விசிறியை உபயோகிக்க வேண்டும். இதனால், உள்ளிருக்கும் வெப்பம் வெளியேறிவிடும். இதெல்லாம் தற்காலிக தீர்வு என்றாலும், வீட்டை சுற்றி நம் மரக்கன்று நடுதலே நிரந்தர தீர்வாகும்.. சுற்றுப்புறத்தையும் வீட்டையும் குளிர்ச்சியாக வைத்திருக்க இதைவிட இயற்கை கொடையை வேறெந்த செயற்கை பொருட்களும் தந்துவிடாது என்பதே உண்மை..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+