Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயா அழகிரி "டெல்லி"க்கு போறாரா?.. அழகிரி பட்ட பாடெல்லாம் வீண் போகல.. கனிகிறதா காலம்.. குஷியில் மதுரை

துரை தயாநிதி பதிவிட்டுள்ள ட்வீட்டை திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் - முக அழகிரி சந்திப்பானது, திமுகவினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், துரை தயாநிதி பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டை, திமுகவினர் ஷேர் செய்தும் வருகிறார்கள்..
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பெரியப்பாவான முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியை, நேற்றைய தினம், நேரில் சந்தித்து ஆசி பெற்றார்..

வீட்டிற்குள் நுழையும் முன்பே அமைச்சர் உதயநிதியை அழகிரி வரவேற்றார். அப்போது, உதயநிதி ஸ்டாலினும் அழகிரியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். தொடர்ந்து அழகிரியின் மனைவி காந்தியும், உதயநிதிக்கு நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார்.

பெரியம்மா

பெரியம்மா

உதயநிதி ஸ்டாலின் - அழகிரி இருவருமே மாறி மாறி பொன்னாடைகளை போர்த்திக்கொண்டனர்.. இருவருமே செய்தியாளர்களிடம் பேசினார்கள்.. "அமைச்சராக பதவியேற்ற பிறகு, என்னுடைய பெரியப்பாவை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன்... பெரியப்பாவும் பெரியம்மாவும் என்னை ஆசிர்வதித்தனர்... மனநிறைவோடு வாழ்த்தினர்" என்று உதயநிதி கூறியிருந்தார்.. அமைச்சர் அன்பில் மகேஷும் உதயநிதியுடன் சென்றிருந்ததுடன், அவரும் அழகிரியிடம் வாழ்த்தையும், ஆசியையும் பெற்றார்.

 திக்குமுக்காடிய உறவுகள்

திக்குமுக்காடிய உறவுகள்

அழகிரி இதுகுறித்து கூறும்போது, "தம்பி மகன் என்ற முறையில் எங்களிடம் ஆசி பெற வந்திருந்தார். அமைச்சர் அன்பில் மகேஷும் எனக்கு இன்னொரு மகன்தான். அவருக்கும் ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளேன். நான் திருநகரில் உள்ள வீட்டில் இருந்தபோது என் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதைவிட சந்தோஷம் என்னுடைய தம்பி முதல்வராக இருப்பது, மகன் அமைச்சராகி உள்ளார்" என்று அழகிரி நெகிழ்ந்து கூறியிருந்தார்..

வீட்டுவாசல்

வீட்டுவாசல்

திமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு, அதை அவர்கள் ( தலைமை ) தான் முடிவு செய்ய வேண்டும் என்று அழகிரி மேலும் கூறியிருந்தது, மிகுந்த எதிர்பார்ப்பை திமுகவில் ஏற்படுத்தி வருகிறது. வீட்டு வாசலுக்கு வந்த காந்தி அழகிரி, உதயநிதியை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். உதயநிதி அங்கு இரவு டிபன் சாப்பிட்டார். சிறிதுநேரம் இருவரும் தனியாக பேசினார்கள்.. அப்போது அழகிரியின் குடும்பத்தினர் மட்டும் உடனிருந்தனர்... அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பானது அரசியல் வட்டாரங்களில் குறிப்பாக திமுகவில் மகிழ்ச்சியை உண்டாக்கி வருகிறது.. அதேசமயம், சில ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது..

கோபாலபுரம்

கோபாலபுரம்

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, எத்தனையோ முறை ஸ்டாலின், மதுரை செல்ல நேர்ந்தது.. ஒவ்வொரு முறை மதுரை செல்லும்போதெல்லாம் அழகிரியை சந்திக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்பட்டன.. ஆனால், ஒருமுறைகூட சந்திப்பு நடக்கவில்லை.. மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் நினைவுநாள்களில் அழகிரி கோபாலபுரம் வரும்போதெல்லாம், முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோபாலபுரம் வீட்டிலேயே, இருவரும் சந்தித்து கொள்ளாத தருணங்கள்தான் நடந்தன.

துரைதயாநிதி

துரைதயாநிதி

முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது ஆனால் அவர் வரவில்லை. அவரது மகன் துரைதயாநிதி வந்திருந்தார். அவரை உதயநிதி கட்டியணைத்து வரவேற்றார். எனினும், இரு தரப்பில் நிலவிவந்த மனக்கசப்பை நீக்குவதில், கலைஞரின் மகள் செல்விக்கு நிறையவே பங்கு உள்ளதை மறுக்க முடியாது.. இதற்காக அவர் நிறைய முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்.. அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான், இன்று இரு தரப்பிலும் கனிந்து, சந்திப்பாக நிகழும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்கிறார்கள்.

மனநிறைவு

மனநிறைவு

ஒருவேளை உதயநிதியை முதலில் அழகிரியிடம் அனுப்பிவைத்துவிட்டு, அதன்மூலம் தன்னுடைய ஆதரவையும் நெருக்கத்தையும் ஸ்டாலின் வெளிப்படுத்த முயன்றிருக்கலாம் என்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், இந்த நிகழ்வு திமுக தொண்டர்களிடம் மகிழ்ச்சியும் மனநிறைவு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி கிடைத்தால், அது தென்மண்டல திமுகவுக்கு பலத்தை பெற்றுதரும் என்றும், தங்களுக்கும் பதவிகள் கிடைக்கும், என்றும் அழகிரி ஆதரவாளர்களுக்கு பெருத்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, மதுரை தொகுதியில் தயாஅழகிரிக்கு எம்பி சீட் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்றிவைத்தேன்

ஏற்றிவைத்தேன்

ஒருவேளை இந்த தகவல் உண்மையானால், அழகிரிக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.. காரணம், மகனை நினைத்து பலமுறை அழகிரி வருத்தப்பட்டதாக செய்திகள் பலமுறை கசிந்துள்ளன.. "உதயநிதியை இளைஞரணி செயலாளராகவும் ஆக்கிவிட்டார்கள். ஆனால், நான் எத்தனையோ பேரை பெரிய இடத்துக்கு கொண்டு வந்தேன். என் மகனை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்க முடியாம போச்சே" என்று அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டதாகவும்கூட சொல்லப்பட்டது. அந்தவகையில், மகனுக்கு சீட் கிடைத்தால், அழகிரிக்கு புதுத்தெம்பு கிடைத்தது போலிருக்கும் என்கிறார்கள்.

 ஹார்ட் போட்டோ

ஹார்ட் போட்டோ

இப்படிப்பட்ட சூழலில்தான், உதயநிதி - அழகிரி சந்திப்பு குறித்து, தயா அழகிரி ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய அப்பா அழகிரியை சந்தித்ததை பொங்கல் பண்டிகை என்று குறிப்பிட்டு, "ஹார்ட்" போட்டு அந்த சந்திப்பின் போட்டோவையும் ட்விட்டரில் தயா அழகிரி பதிவிட்டுள்ளார். ஹார்ட் போட்டு அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், துரைதயாநிதி மட்டுமே வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கன்ட்ரோல்

கன்ட்ரோல்

இதனிடையே இன்னொரு தகவலும் பரபரக்கிறது.. கடந்த முறை மதுரை தொகுதிக்கு திமுகவிலேயே எத்தனையோ பேர் முயன்றார்கள்.. ஆனால், கூட்டணிசியில் உள்ள சிபிஎம் கட்சிக்கு திமுக ஒதுக்கிவிட்டது. துணை மேயர் பதவியையும் எம்பி வெங்கடேசன் ஆதரவாளருக்கே பெற்று தந்துவிட்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது.. ஏற்கனவே மதுரை திமுக உட்கட்சி பூசல் தலைவிரித்தாடிவரும் நிலையில், மீண்டும் அழகிரி தரப்பே மதுரையை கையில் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் திமுக மேலிடம் நினைக்கிறதாம்.. இதனால், உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவருவதுடன், வளர்ந்து வரும் மதுரை பாஜகவையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+