சனாதனம் + ஆளுநர் + பாஜக.. பிராமணர்கள் இந்துக்களுக்கு செய்தது என்ன? ஓப்பனாக பேசிய ஆ.ராசா -EXCLUSIVE

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார்.வரலாற்று ரீதியாக சில தவறான விஷயங்களை இவர் பேசுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுதான் சனாதன தர்மம். . இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது தமிழ்நாட்டில் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சனாதன கலாச்சாரம் என்றெல்லாம் குறிப்பிட்டு வருகிறார்.

சனாதனம் குறித்த அவரின் பேச்சுக்களை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூட திமுக குரல் கொடுக்க தொடங்கி உள்ளது. திமுக எம்பி ஆ. ராசா கூட சனாதனத்தையும், இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து கடுமையாக பேசினார் இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இந்தி திணிப்பு, ஆளுநரின் சனாதன பேச்சு, இந்து மதத்தில் உள்ள ஜாதி ஏற்றத்தாழ்வுகள், பிராமணர்கள் செய்த அரசியல் என்று பல விஷயங்களை பற்றி ஓப்பனாக பேசி இருக்கிறார்.

இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

இந்தியை இந்தியாவில் பிரபலப்படுத்த வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டமே சொல்கிறதே?

மன்னிக்கணும் உங்கள் கேள்வியிலேயே பிழை இருக்கிறது. பரப்புங்கள் என்று சொல்வது சரி, திணிப்பது வேறு. இந்தி படியுங்கள் என்று வீடு வீடாக அடித்து நோட்டீஸ் ஒட்டுங்கள். சரி. ஆனால் இந்திதான் படித்தே ஆக வேண்டும் என்று சொல்வது தவறு.

அப்படி சொல்கிறார்களா?

அப்படி சொல்கிறார்களா?

ஆம் அப்படித்தான் சொல்கிறார்கள். நிலைக்குழு பரிந்துரையில் அப்படித்தான் இருக்கிறது. இந்தியை கட்டாயப்படுத்த வேண்டும் என்று அதில் பரிந்துரை செய்துள்ளனர். ஆங்கில மீடியம் கல்லூரியில் இருந்தது. முதல்வராக கருணாநிதி இருந்த போது தமிழ் மீடியம் கொண்டு வந்தார். ஆனால் அவர் ஆங்கிலத்தை தடுக்கவில்லை. பரப்புவது என்பது வேறு, திணிப்பது என்பது வேறு. இந்தியை விட்டு அவர்கள் ஆழம் பார்க்க பார்க்கிறார்கள். இந்தியை வைத்து இந்துத்துவாவை கொண்டு வர பார்க்கிறார்கள். ஒரே நாடு.. ஒரே மொழி என்று இவர்கள் கொண்டு வந்தால் அதன் மூலம் ஒரு ஜாதிக்கான மேலாண்மையை மேலே கொண்டு வர பார்ப்பார்கள்.

ஆளுநர் வழக்கு

ஆளுநர் வழக்கு

என்ன ஜாதியை சொல்கிறீர்கள்?

உங்களுக்கு தெரிந்தது தானே.. இந்து மதத்தால் அதிகமான பதவிகளை.. அதிகமான வசதிகளை அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். எத்தனை ஆண்டுகளாக.. 2000 ஆண்டுகளாக அவர்கள்தான் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் தவறு. பெரியாருக்கு என்ன கோபம் இந்து மதம் மீது.. தான் மதத்துக்காரன் படிக்க கூடாது என்று சொன்ன மதத்தை காட்டு என்று அவர் கேட்டார். மனிதனை பிளவுபடுத்தும் மதம் எது என்று காட்டு. இஸ்லாமில் மதம் இருக்கிறது என்பார்கள். ஆனால் குர்ஆனில் இருக்கிறதா? பகவத் கீதையில் இருக்கிறது.

ஆளுநர் சனாதனம்

ஆளுநர் சனாதனம்

ஆளுநர் சனாதனம் பற்றிபேசுகிறார். நான் ஆளுநர் பதவியை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அரசியலமைப்பிற்கு எதிராக இருக்கும் அவருக்கு எதிராக வழக்கே தொடுக்க வேண்டும். கிரிமினல் வழக்கே தொடுக்க வேண்டும். ஆனால் அவருக்கு வழக்கில் இருந்து விலக்கு இருக்கிறது. ஆனால் அவர் அரசியலமைப்பு சட்டப்படி பேசாமல் சனாதனம் பற்றி பேசுகிறார்.

உலகம் உருண்டை என்று சொன்ன புருனோவை கிறிஸ்துவர்கள் எரித்தார்கள். 400 ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துவ போப் ஆண்டவர் இதற்கு மன்னிப்பு கேட்டு சிலை வைத்தார். கிறிஸ்துவம் தனது அறிவியல் பார்வையை திருத்திக்கொள்ள தயாராகி இருக்கிறது. நான் சில நாட்கள் முன் பேசியதை கேட்டு குதித்தனர். ஆனால் யாரவது இந்து மதத்தில் நம்முடைய தவறுங்களை சரி செய்ய வேண்டும். நம்முடைய மதத்தில் இருப்பதை சரி செய்ய வேண்டும். நம்முடைய புத்தகங்களில் இருக்கும் தவறுகளை சரி செய்ய வேண்டும், என்று பேசினார்களா? ஏன் பேசவில்லை. இந்து மதத்தில் யார் அத்தாரிட்டி.. மனு நீதியை அவர்களால் எரிக்க முடியுமா?

 இல்லவே இல்லை

இல்லவே இல்லை

ஆனால் நீங்கள் இப்படி வாதம் வைக்கும் போதெல்லாம் சனாதனத்தில் இப்படி எல்லாம் இல்லவே இல்லை என்று அவர்கள் சொல்கிறார்களே?

இவர்கள் இந்துக்கள் இந்துக்கள் என்று சொல்லும் பெரும்பாலான இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்கள். இப்போது இருக்கும் சைவ பிள்ளைமார்களை கூட இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் தெளிவாக சொல்கிறேன். காசு பிள்ளை முதன் முதலில் எம்எல் படித்தார். அவரை நீதிபதியாக்கினார்களா? கல்லூரியில் வகுப்பு எடுக்க விட்டீர்களா? முக்குலத்தோர் தொடங்கி எல்லோரும் இந்துக்கள் தானே? அவர்களை எல்லாம் ஒதுக்கி வைத்தது யார். அம்பேத்கார் என்ன சொன்னார்.. நாங்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை.. நாங்கள் எல்லாமே outcast என்றார். அப்போது காந்தி பயந்தார். அதேபோல்தான் இவர்களும் பயப்படுகிறார்கள். திமுகவால் இந்துக்களுக்கு விழிப்பு வந்தால் அவர்கள் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்ற பயம்.

இந்துக்கள்

இந்துக்கள்

90 சதவிகிதம் இந்துக்களை படிக்க வேண்டாம் என்று சொன்னது யார்? அழுத்தியது யார்? என்ன மதம்? அது இந்து மதம் தானே? அவர்களை விடுவித்தது யார்? இந்துக்களை ஒடுக்கியது இந்து மதம் தானே? இந்து புத்தகம் நம்மை ஒதுக்கினால் அந்த புத்தகம் வேண்டாம்.. நீ என்னை ஒதுக்கினால் நீ எனக்கு வேண்டாம்?. பெரும்பான்மை இந்துக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்த போது.. அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போனது இந்துவா? முஸ்லிமா? சொல்லுங்கள்.

இவன் எல்லாம் படிக்க கூடாது. இவன் எல்லாம் ஸ்கூலுக்கு போக கூடாதுன்னு சொன்னது யார்? இவன் ஐஐடி போக கூடாதுன்னு தடுத்தவன் யார்? அப்படி சொல்லும் இந்துக்கள் இன்னும் இருக்கிறான்? ஐஐடியில் சாதி இல்லையா? அங்கு ஜாதியால் தற்கொலைகள் இருக்கின்றன.

ஜாதி

ஜாதி

60 ஆண்டுகளாக நடந்த திராவிட ஆட்சியில் இப்பவும் ஜாதி இருக்கிறதே? கருவறைக்குள் இப்போதும் தலித்துகள் போக முடியவில்லையே? சிதம்பரம் கோவிலுக்குள் இப்போதும் போக முடியவில்லையே?

அதைத்தான் நானும் கேட்கிறேன். அப்போ என்ன இந்து மதம். எந்த கோவில் அரசாங்க கோவில் என்றோம். யார் அதை தடுத்தார்கள். 2000 ஆண்டு கால வரலாற்றை நாங்கள் 60 வருடங்களில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை செய்து இருக்கிறோம். பார்க்காதே, தொடாதே, தீண்டாதே என்பதை நாங்கள் 60 வருடங்களில் மாற்றி இருக்கிறோம். ஆனால் 2000 வருடமாக நீங்கள் மட்டும் மாறவே இல்லையே.

மண்டல் கமிஷனை எதிர்த்து கேஸ் போட்டது யார்? ஏன் இந்துக்களை படிக்க விடாமல் அப்போது தடுத்தனர்? இப்போது பொருளாதார இடஒதுக்கீடு கொண்டு வர பார்த்தது?

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு

ஜாதி ரீதியாக செருப்பு தைப்பவனுக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு.. ஆனால் 8 லட்சம் சம்பாதிக்கும் குறிப்பிட்ட இந்துவுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு. பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு கல்வி கிடைக்க கூடாது, இடஒதுக்கீடு கிடைக்க கூடாது என்று சொல்லும் அந்த இந்து யார்? நான் இந்து இந்து என்று சொல்லும் அதே இந்து தானே இதையும் செய்கிறேன். எங்களை விட இந்துக்களுக்காக போராடியது யார்? பச்சையாக கேட்கிறேன்.. பிராமணர்கள் இந்துக்களுக்கு செய்தது என்ன? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது யார்? நாங்களே தானே.

ஆனால் அந்த இடஒதுக்கீட்டை கொடுக்க விடாமல் தடுக்க பார்த்தது யார்? அம்பேத்காரையே இயங்க விடாமல் தடுத்தவர்கள் யார்? அவரை தடுத்தது அப்போது காங்கிரசில் இருந்த பார்ப்பனர்கள் தானே?, என்று ஆ. ராசா தனது பேட்டியில் காட்டமாக குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+