EXCLUSIVE: "அவதாரத்திற்கே சீட் பெல்ட்டா?".. ரூல்ஸை மீறிய அன்னபூரணி.. பிடித்த போலீஸ்.. அடித்த ஃபைன்!
சென்னை: ஆதிபராசக்தியின் அவதாரம் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி சில நாட்களுக்கு முன் டிராபிக் போலீசில் அபராதம் கட்டிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் சில போக்குவரத்து விதிகளையும் அன்னபூரணி மீறி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அன்னபூரணி அம்மா அருள்வாக்கு வழங்க போவதாக சமூக வலைத்தளங்களில் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது.
ஆதிபராசக்தி அவதாரமாக உருவெடுத்துவிட்டார். அவர் மக்களுக்கு அருள் வழங்க போகிறார் என்று கூறப்பட்டு இருந்தது. செங்கல்பட்டை சேர்ந்த அன்னபூரணி அரசு என்ற பெண்ணை தன்னை ஆதிபராசக்தியின் அவதாரமாக அறிவித்துவிட்டு இப்படி போஸ்டர் வெளியிட்டு இருந்தார்.

வீடியோ
தனது பக்தர்களுக்கு இவர் அருள் வழங்கும் வீடியோ இணையம் முழுக்க வைரல் ஆனது. பேஸ்புக்கில் இவர் சீரியஸாக காமெடி செய்தி பதிவேற்றிய வீடியோக்கள் இணையம் முழுக்க டிரெண்டிங்கில் இடம் பிடித்து மீம் மெட்டீரியல் ஆனது. இவரின் அவதாரம் தொடர்பான விளம்பர போஸ்டரில் அருள்வாக்கு பெற ஜனவரி 1ம் தேதி எல்லோரும் செங்கல்பட்டிற்கு வந்துவிடுங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

தடை
இதையடுத்து டிரெண்டாக தொடங்கிய அன்னபூரணி இப்போது வைரலாகி உள்ளார். இவரின் நிகழ்ச்சிக்கும் போலீசார் தடை விதிக்கும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. இவர் மீது தொடர்ந்து புகார்கள் வைக்கப்பட்டு வருவதால் இவர் விரைவில் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

புகார்கள்
இவரின் அவதார வீடியோக்கள் காரணமாக இந்து அமைப்புகள் பல கொதித்து போய் இருக்கின்றன. இவர் போலி சாமியார் என்று பலர் புகார்களை வைத்து வருகிறார்கள். அதேபோல் இவரின் இரண்டாவது கணவர் அரசு மரணம் அடைந்தது எப்படி என்றும் கேள்வி எழுந்துள்ளது. அரசு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துவிட்டதாக ஒரு பக்கம் கூறப்படுகிறது.

மரணத்தில் சர்ச்சை
ஆனால் அதே சமயம் அரசு ஒளியாக கலந்துவிட்டார். தன்னுடன் அவர் ஒளியாக இணைந்துவிட்டார் என்று அன்னபூரணி விசித்திரமாக தெரிவித்து வருகிறார். அரசுவின் மரணம் குறித்து அன்னபூரணி இப்படி தெரிவித்து இருப்பது கேள்வி மேல் கேள்விகளை எழுப்பி உள்ளது. அரசுவின் மரணம் குறித்த மர்மம் நீடிக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அன்னபூரணியின் மூன்றாவது கணவர் ரோஹித் மீதும் பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ரோஹித்
மூன்றாவது கணவர் ரோஹித் உடன் சேர்ந்துதான் அன்னபூரணி இந்த ஆதிபராசக்தி அமைப்பை தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இல்லை. இந்த நிலையில் மதுராந்தகத்தில் அன்னபூரணி நிறுவி இருக்கும் அரசுவின் நினைவு சிலையை ரோஹித் உடைத்து எறிந்ததாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கைது வாய்ப்பு
இப்படி அடுக்கடுக்காக சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில்தான் அன்னபூரணி சில நாட்களுக்கு முன் டிராபிக் போலீசில் அபராதம் கட்டிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இவரின் கார் நம்பரை வைத்து நடத்திய விசாரணையில் இந்த விதி மீறல் விவரங்கள் நமக்கு கிடைத்து உள்ளன. அதன்படி அன்னபூரணி சிவப்பு நிற ஹோண்டா கார் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.

கார் இன்சூரன்ஸ்
இவரின் கார் இன்சூரன்ஸ் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பே காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டது. ஆனாலும் இன்சூரன்ஸை புதுப்பிக்காமல். இந்த காரை அவர் பயன்படுத்தி வந்து இருக்கிறார். இது அவரின் பெயரில் பதியப்பட்ட கார் ஆகும். இவர் மீது சமீபத்தில் கார் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை
இவரின் பெயரில் போலீசார் கொடுத்த அபராத செல்லான் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சீட் பெல்ட் அணியாமல் இவர் கடந்த ஜனவரி மாதம் பயணம் செய்துள்ளார். இதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவரை பிடித்து போலீசார் இவரின் பெயரில் அபராதத்தை பதிவு செய்துள்ளனர்.

கடவுள்
சட்டப்பிரிவு 138(3)/177 கீழ் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தன்னை தானே கடவுள்.. அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி சீட் பெல்ட் கூட அணியாமல் பயணம் செய்துள்ளார். அதேபோல் காரின் இன்சூரன்ஸை கூட renew செய்யவில்லை. இவர் சாலை விதிகளை தொடர்ந்து மீறி வந்துள்ளது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications