Exclusive:இன்னும் 2 வருஷம்தான்! கொடுங்கையூர் குப்பை மேடு என்ன ஆகுதுனு பாருங்க! கலாநிதி வீராசாமி
சென்னை: வடசென்னை தொகுதியில் மீண்டும் ஜெயிப்பேன் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு திமுக எம்பியும் வேட்பாளருமான கலாநிதி வீராசாமி அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: வடசென்னை எம்பி தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளும் திமுக வசம் உள்ளன. அது போல் கவுன்சிலரும் திமுக. அப்படியிருக்கும் போது ஆளும் கட்சி மீது அதிருப்தி இருந்தால் அது என்னுடைய வெற்றிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என கேட்கிறீர்கள்.

ஆன்டி இன்கம்பன்சி எப்போது வரும்? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிறைய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். உதாரணமாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை 1.17 கோடி பேர் பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் என பார்த்தால் தோராயமாக 2.20 கோடி என்கிறார்கள். இந்த குடும்பங்களில் 50 சதவீதத்திற்கு மேல் வரை ஏழ்மை குடும்பங்களின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. அதில் விடுபட்டவர்களுக்கு செய்து தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்தவுடன் செய்து தரப்படும். பேருந்தில் செல்லும் பெண்களுக்கு உரிமைப் பயணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் மிகவும் நலிந்தவர்கள் பேருந்தில் செல்வார்கள். அவர்களுக்கு இந்த இலவச பஸ் பயணம் பயன் கொடுக்கும். இதனால் மாதம் ஒரு பெண்ணுக்கு பேருந்து கட்டணம் ரூ 800 வரை மிச்சமாகிறது.
இப்படி ஒவ்வொரு பெண்களுக்கும் பார்த்து பார்த்து முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை செய்துள்ளதால் அதற்கான பலனை மக்கள் இந்த தேர்தலில் கொடுப்பார்கள். நாங்கள் எதிர்பார்ப்பது சென்ற முறை பெற்ற வாக்குகளை விட அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதுதான்.
எண்ணூர் வாயு கசிவின் போது நான் நேரடியாக களத்திற்கு சென்று அங்கு ஆய்வு செய்துவிட்டு டெல்லியில் சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்துவிட்டு கோரமண்டல் நிறுவனத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறேன். ஸ்டெர்லைட் பிரச்சினையிலும் தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை போய் வாதாடி அதை மூட வேண்டும் என்ற தீர்ப்பை வாங்கிக் கொடுத்துள்ளது. அது போல் கோரமண்டல் நிறுவனமும் மூடப்படும். நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு இருக்கிறது.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு ரூ 600 கோடி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் நான் கேட்டிருந்தேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த கொடுங்கையூர் குப்பை மேட்டை சுத்தப்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இன்னும் 2 நாடுகளில் கொடுங்கையூர் குப்பை மேடு சரித்திரம் ஆகிவிடும். வடசென்னையில் ஐடி காரிடார், மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை உருவாக்கப்படும். இவ்வாறு கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications