தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக ஓபிஎஸ் வைத்துள்ள சீக்ரெட் பிளான்.. கேம் சேஞ்சர் ஜெயபிரதீப்?
சென்னை: வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 24 தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகளை ஓபிஎஸ்ஸும் தினகரனும் பிரிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் குபேந்திரன் "ஒன் இந்தியா அரசியல்" யூட்யூப் தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் குறைந்தது 20 முதல் 25 தொகுதிகளில் டிடிவி தினகரனுக்கு வாக்கு வங்கி இருக்கிறது. அந்த 25 தொகுதிகளில் 10 தொகுதிகளில் 15 ஆயிரம் ஓட்டுகள் இருக்கும்.

ஆனால் டிடிவி தினகரனால் பாஜக கூட்டணியில் சேர முடியாது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் கூட்டணியில் பாஜக சேர்த்து கொண்டால் எடப்பாடி பழனிசாமி சும்மா இருக்க மாட்டார். எடப்பாடியின் கணக்கே வேறு. எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்றால், "மத்தியில் வரும் 2024 இல் பாஜக ஆட்சியை பிடிப்பது கஷ்டம். தனி பெரும்பான்மை கட்சியாக 220 தொகுதிகளில் பாஜக வெல்லலாம்.
பாஜக ஆட்சி அமைக்க 50 தொகுதிகளின் எம்பிக்களின் ஆதரவு தேவைப்பட்டால் அப்போது நாம் (அதிமுக)20 தொகுதிகளில் ஜெயித்துவிட்டதால், நம் துணையில்லாமல் மோடியால் ஆட்சி அமைக்க முடியாது. 10 ஆண்டுகளாக பாஜகவை பார்த்து நாம் பயந்துட்டு இருந்தோம்ல, நாம் இப்போது 20 எம்பி தொகுதிகளில் ஜெயித்துவிட்டால் நம்மை பார்த்து பாஜக பயப்படும்" இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்.

நானும் ஓபிஎஸ்ஸும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறோம் என டிடிவி சொல்வது பாஜகவுக்கு மறைமுக அழுத்தம் கொடுப்பதுதான். டிடிவிக்கு இருக்கும் வாக்கு வங்கி, ஓபிஎஸ்ஸுக்கு என இருக்கும் ஆதரவு ஆகியவை குறித்து பாஜகவுக்கு நன்றாக தெரியும். அதிமுகவுக்குள் எடப்பாடி சேர்க்காவிட்டால் ,பாஜக கூட்டணியில் சேர்க்க வாய்ப்பிருக்கிறது.
பாஜக கூட்டணியில் சேர்க்கும் போது ஓபிஎஸ்+ டிடிவி தினகரனுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கி அதில் அவர்கள் வென்று மற்ற தொகுதிகளில் அதிமுக தோற்றுவிட்டால் அவ்வளவுதான். எங்களை கட்சியில் சேர்க்காமலேயே நாங்கள் கொடுத்த தொகுதிகளில் வென்றுவிட்டோம். இதே அதிமுகவில் எங்களை சேர்த்திருந்தால் எங்கள் செல்வாக்கால் 20 தொகுதிகளில் நிச்சயம் வென்றிருக்கும். எனவே அதிமுகவில் எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என கேட்பார்கள்.

ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு இருக்கும் முக்குலத்தோர் வாக்குகளை பெற எடப்பாடி கடைசி நேரத்தில் எந்த வகையிலாவது முயற்சிப்பார். அப்படியும் இல்லாவிட்டால் 2024 ஆம் ஆண்டு தேர்தல் என்பது எடப்பாடிக்கானது அல்ல, பிரதமர் மோடிக்கானது, இதில் ஜெயித்தால் 10 எம்பிக்கள் கிடைக்கும், மகிழ்ச்சி, தோற்றாலும் கவலையில்லை என எடப்பாடி நினைக்க வாய்ப்பிருக்கிறது.
எடப்பாடியின் இலக்கு என்பது 2026 சட்டசபை தேர்தல்தான். 2026 க்குள் ஓபிஎஸ், டிடிவியின் செல்வாக்கு நீர்த்து போய்விடும். முக்குலத்தோர் வாக்குதானே வேண்டும், ஓபிஎஸ்ஸின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப்புக்கு எடப்பாடி கொடுத்து சீட்டு கொடுக்கலாம். அது போல் டிடிவி தினகரன் அணியில் வலிமையாக இருக்கும் ஓரிருவருக்கு சீட் கொடுக்கலாம். இந்த கேம்கள் எல்லாம் போக போக நடக்கும்.

ஓபிஎஸ் எடப்பாடியில் மாநாடு போட்டு என்ன ஆக போகிறது. என்டிஏ கூட்டணியில் இருந்து அவர்களாகவே தள்ளும் வரை நாங்கள் அங்கே இருக்கிறோம் என கூறுவது ஓபிஎஸ்ஸுக்கு அழகா. இந்த நேரத்திற்கு ஓபிஎஸ் தன் பக்கம் 10 எம்எல்ஏக்களையும் 5 மாவட்டச் செயலாளர்களையும் வைத்திருக்க வேண்டும். ஓபிஎஸ் எப்போதும் தனிமரம்தான், தனி மரம் எப்போதும் தோப்பாகாது.
அமமுகதான் ஓபிஎஸ், ஓபிஎஸ்தான் அமமுக என டிடிவி தினகரன் வெளிப்படையாக சொன்ன போதிலும் ஓபிஎஸ்ஸுக்கு மனதில் இருப்பது அதிமுகதான். எப்படியாவது அதிமுகவில் சேர பாஜக உதவாதா என்ற ஏக்கம்தான். ஆனால் எடப்பாடி சேர்க்க மாட்டார். ஓபிஎஸ் நிலை கஷ்டம்தான். ஓபிஎஸ்ஸால் ஏற்கெனவே அதிமுகவில் இருந்த இடத்தை பெறவே முடியாது.
டிடிவி தினகரன் 201 9 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றாலும் 7 சதவீத வாக்கு வங்கியை பெற்றார். அது போல் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தோற்றாலும் 4 சதவீத வாக்கு வங்கியை பெற்றார். எனவே டிடிவி தினகரனுக்கு அரசியல் கட்சியை நடத்த வேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்கிறது. அவர் மீதுள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றால் தன்னை பெரிய தலைவர் என காட்டிக் கொள்ள அவருக்கு அரசியல் கட்சி தேவை.
ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு ஒரு கட்சிக்கு தலைவராக வேண்டும் என்ற ஆசையே கிடையாது. ஏதோ இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டமாகவே இருந்துவிடலாம் என நினைக்கிறார். ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கான ஆதரவு கூட்டத்தை காட்டினால் கூட எடப்பாடி அவரை ஏற்கமாட்டார். எனவே அதிமுகவில் சேர்க்கிறார்களா என பார்த்துவிட்டு யாரும் சேர்க்காவிட்டால் பாஜகவில் கூட ஓபிஎஸ் இணைந்துவிடுவார். எனவே எடப்பாடிக்கு 2026 ஆம் ஆண்டுதான் முக்கியம் என்பதால் அவர் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. ஓபிஎஸ், தினகரன், சசிகலாவை கட்சியில் சேர்த்தால் அவர் காணாமல் போய்விடுவார் என்று கருதுகிறார். அதே சமயம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும் எடப்பாடிக்கு நெருக்கடி விட்டுக் கொடுக்க அதிமுக நிர்வாகிகள் தயாராக இல்லை. இவ்வாறு குபேந்திரன் தெரிவித்தார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications