செந்தில் பாலாஜி மீது பாஜக குறி வைக்கிறதா? வாய்ப்பை கொடுத்ததே திமுகதானே.. முக்கிய புள்ளி பகீர்
சென்னை: செந்தில் பாலாஜியை குறி வைப்பதற்கு பாஜகவுக்கு வாய்ப்புகளை வழங்குவது திமுகதானே என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒன் இந்தியா அரசியல் களம் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜி தாக்கப்பட்டார் என்ற விவகாரத்தில் வேல்முருகன் கூறியது போல் தமிழக அரசால் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என கேட்கிறீர்கள். இதை எல்லாம் நான் எமோஷனலாக சொன்ன வார்த்தையாகத்தான் நான் பார்க்கிறேன்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பல சர்ச்சைகள் வரும். ஒவ்வொரு முறையும் மத்திய அரசு எப்படி செயல்பட வேண்டும் என மாநில அரசிடம் கேட்டு செயல்பட முடியாது. மத்திய அரசு அதிகாரிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா என்றால் இதுவரை எனக்கு தெரிந்து வாய்ப்பில்லை.

வருமான வரித் துறை: மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகள் கரூரில் செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் ரெய்டு நடத்த சென்ற போது அதிகாரிகளை திமுக தொண்டர்கள் தாக்கியது ஏன், அதுதான் முதல் தவறு? அந்த தவறின் விளைவுதான் நீங்கள் இத்தனை அனுபவிக்கிறீர்கள். மத்திய அரசு அதிகாரிகளை ஆளும் கட்சியின் தொண்டர்கள் தாக்கினார்கள் என்பதால்தான செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் கேள்வியால் அமலாக்கத் துறை துளைத்தார்கள் என பேசுகிறோம்.
டார்ச்சர்: வந்த வருமான வரித் துறை அதிகாரிகளை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்தவில்லை. இதற்காக செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை டார்ச்சர் செய்ததற்காக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்றே நினைக்கிறேன். மத்திய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என என்.ஆர். இளங்கோ மனு தாக்கல் செய்தால் அது மாநில அரசுக்கு வேறு வகையில் சிக்கலை ஏற்படுத்தும்.
செந்தில் பாலாஜியை முடக்கிவிட்டால் கொங்கு மண்டலத்தில் திமுகவை சரிய வைக்க பாஜக கருதுகிறது என திமுக சொல்வது தவறு. செந்தில் பாலாஜி ஏன் குறி வைக்கப்படுகிறார் என்றால் அவர் அதிமுகவுக்கும் பிடித்த நபர் அல்ல, பாஜகவுக்கும் பிடிக்காதவர். செந்தில் பாலாஜி மதுவிலக்கு துறை அமைச்சராக இல்லாமல் அவர் மீது எந்த குறையும் இல்லாமல் இருந்தால் செந்தில் பாலாஜியை கைது செய்ய முடியுமா.
சட்டவிரோத பார்: டாஸ்மாக் விவகாரம், சட்டவிரோத பார், தம்பி அசோக்குமார், ஐடி ரெய்டு நடக்கிறது, செந்தில் பாலாஜியை சுற்றியிருப்போர் புலனாய்வு துறை விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்கள். செந்தில் பாலாஜி கைது ஏன் என்பது குறித்து விவரங்கள் எல்லாமே ஆவணங்கள் மூலம் வெளிப்படும் போதுதான் உண்மை தெரியும். செந்தில் பாலாஜி தவறு செய்தாரா இல்லையா என்பது ஒரு புறம் இருந்தாலும் கொங்கு மண்டலத்தை செந்தில் பாலாஜிதான் காப்பாற்ற முடியும் என திமுக சொல்வது எனக்கு வருத்தமளிக்கிறது.
செந்தில் பாலாஜிக்கு எதிரி: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக கட்டணம் பெறுவது என்பது காலம் காலமாக நடந்தாலும் தற்போது செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக மட்டும் போராடவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும் கடுமையாக போராடுகிறது. கொங்கு மண்டலம், திமுக என்றில்லை, ஒவ்வொரு அமைச்சராக கொங்கு மண்டலத்தை வீழ்த்த வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. இதில் முதல் இலக்கு செந்தில் பாலாஜி, அடுத்து எ.வ.வேலு, கே.என். நேரு, மனோ தங்கராஜ் இப்படி போய்க் கொண்டே இருக்கும்.
திமுக அமைச்சர்களே இலக்கு: மத்திய அரசின் இலக்கு திமுக அமைச்சர்களை வீழ்த்துவதுதான். அதற்கான சந்தர்ப்பத்தை கொடுப்பது யார். மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ 10 கேட்டது யாரு, சட்டவிரோத பார் நடத்தியது யார், வெளிமாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுவகைகள் இரவு நேரங்களில் அதிகமாக கிடைக்க வழி வகை செய்வது யார்? பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் திமுகவே வாய்ப்பை கொடுத்துவிட்டு என்னை டார்க்கெட் செய்கிறார்கள் என திமுகவும் செந்தில் பாலாஜியும் விமர்சிப்பதை ஏற்கவே முடியாது. இது தவறான வாதம். தமிழகத்தில் பட்டித் தொட்டியெல்லாம் பாஜகவை அண்ணாமலை கொண்டு போய் சேர்க்கிறார் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுவதற்கான வாய்ப்பை தருவதே திமுகதான். ஜூனியரான செந்தில் பாலாஜி, சீனியர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு திமுக தலைமையுடன் நெருக்கமாக இருப்பதால் அவருக்கு சொந்த கட்சியிலேயே எதிரிகள் உண்டு. இவ்வாறு பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்தார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications