ட்விஸ்ட்.. சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமண ஆல்பத்தை வைத்து விசாரணை நடத்தும் போலீஸ்.. ஏன் தெரியுமா?
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த திருட்டு வழக்கின் விசாரணை எந்த திசையை நோக்கி செல்கிறது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கிரைம் பத்திரிகையாளர் செல்வராஜ் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் கேள்வி பதில் வடிவம் இதோ...
கேள்வி: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு திருட்டில் அந்த வீட்டில் பணிபுரியும் ஈஸ்வரி மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது எப்படி?
பதில்: பணிப்பெண் ஈஸ்வரி மீது சந்தேகம் எல்லாம் இல்லை. போலீஸ் புகாரிலேயே பணிப்பெண்கள் ஈஸ்வரி, லட்சுமி, ஈஸ்வரியின் கணவர் உமாபதி ஆகியோர் மீதுதான் சந்தேகம் என்றே ஐஸ்வர்யா புகார் கொடுத்துள்ளார். இதில் டிரைவர் வெங்கடேசன் எப்படி உள்ளே வந்தார் என தெரியவில்லை. அது போல் ஈஸ்வரியின் கணவருக்கும் இந்த திருட்டுக்கும் தொடர்பில்லை என்பதால் அவரை விட்டுவிடுகிறார்கள். மற்றொரு பணிப்பெண் லட்சுமியிடம் விசாரித்தார்களா இல்லையா என தெரியவில்லை.

புகார் கொடுத்தது எப்போது
புகார் கொடுத்தது பிப்ரவரி 10. அதில் ஐஸ்வர்யா கூறியது, 2019 இல் என் தங்கை சவுந்தர்யாவின் திருமணத்தின் போது நகைகளை அணிந்துவிட்டு லாக்கரில் வைத்தேன். அதன் பிறகு அந்த நகைகளை நான் எடுத்து பார்க்கவே இல்லை. இந்த நிலையில் பிப்ரவரி 10 ஆம் தேதி பார்க்கும் போதுதான் நகைகள் காணவில்லை என்பது தெரியவந்தது. அதனால் புகார் கொடுக்கிறேன் என ஐஸ்வர்யா கூறியுள்ளார். ஆனால் அந்த நகைகளில் எந்தெந்த நகைகள் போன்ற விவரங்களை அவர் கூறவில்லை. ஐஸ்வர்யா 60 சவரன் நகை என்றுதான் கூறினாரே தவிர அதில் வைரத்தின் மதிப்பு என்ன, எத்தனை கிலோ வெள்ளி போன்றவற்றையும் அவர் கூறவில்லை.

30 கிராம் வைரம்
ஆனால் போலீஸ் ஈஸ்வரி வீட்டை சோதனையிடும் போது 100 சவரன் நகை, 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அதுபோல் ரூ 95 லட்சம் மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரத்தையும் மீட்டனர். ஈஸ்வரி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டதன் மொத்த மதிப்பு ரூ 3 கோடி ஆகும். ஈஸ்வரியின் வாக்குமூலத்தில் கூட அவர் ஐஸ்வர்யாவின் பினாமி என கூறியதாக செய்திகள் வந்தன. ஆனால் அவை உண்மையில்லை. எந்த நகைகள் காணவில்லை என ஐஸ்வர்யாவுக்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது.

3 இடங்களில் மாறிய லாக்கர்
ஐஸ்வர்யா தனது தங்கையின் திருமணத்திற்கு பிறகு 3 இடங்களை மாற்றியுள்ளார். இந்த 3 இடங்களில் எந்த இடத்தில் லாக்கரை வைத்திருந்த போது நகைகள் காணவில்லை என்பது ஐஸ்வர்யாவுக்கே தெரியவில்லை. ஐஸ்வர்யா போயஸ் தோட்டத்திற்கு சென்றவுடன் ஈஸ்வரி 2021 ஆம் ஆண்டு முதல் அங்கு பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது 100 சவரன் பறிமுதல் செய்யப்பட்டதால் ரஜினி வீட்டிலும் பணிப்பெண் கைவரிசை காட்டினாரா என்ற விசாரணை நடந்து வருகிறது.

திருட்டு வழக்கில்
கேள்வி: ஐஸ்வர்யா நகைத் திருட்டு விவகாரத்தில் போலீஸார் விசாரணை எப்படி நடக்கிறது?
பதில்: பொதுவாக நகை திருட்டு என்றால் திருடப்பட்ட நகைகளுக்கான ரசீதை கேட்டு அதை வைத்து போலீஸார் விசாரணை நடத்துவர். ஆனால் ஐஸ்வர்யா விவகாரத்தில் சவுந்தர்யாவின் திருமண ஆல்பத்தை அப்படியே எடுத்துச் சென்று அதில் ஐஸ்வர்யா போட்டோக்களை ஜூம் செய்து இந்த நகை இருக்கிறதா, அந்த நகை இருக்கிறதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். எந்த நகை என தெரிந்தால் தானே அதற்கு பில் கொடுக்க முடியும்?

ஐஸ்வர்யாவுக்கு குடும்ப பிரச்சினைகள்
குடும்ப பிரச்சினையில் ஐஸ்வர்யா நிறைய நாட்கள் வீட்டுக்கே வராமல் ஹோட்டலில் தங்கியிருந்த சூழல் எல்லாம் நடந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஈஸ்வரி வீட்டுக்குள் போய் வேலை செய்கிறார். அப்போது லாக்கரில் நகைகள் இருப்பது அவருக்கு தெரியும். அதனால் முதலில் ஒரே ஒரு தோடை எடுத்திருப்பார். அதன் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து இன்னொரு தோடையும் எடுத்திருப்பார். அந்த திருட்டில் மாட்டியிருக்க மாட்டார். அதனால் அவர் படிப்படியாக சிறிய சிறிய நகைகளை எடுத்திருந்ததாக ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

எப்படி பணமானது
கேள்வி: இத்தனை நகைகளை ஈஸ்வரி எப்படி பணமாக்கினார்?
பதில் : ஈஸ்வரி 10 அடகு கடையில் நகைகளை விற்று பணத்தை பெற்றுள்ளார். அது போல் டிரைவரிடம் கொஞ்சம் நகைகளை கொடுத்து அவரையும் பணமாக்க சொல்லியிருக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் அதிக சவரன் நகைகளை கொண்டு செல்லாமல் பிரித்து பிரித்து விற்றுள்ளனர். நகை லாக்கரை ஐஸ்வர்யா பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

கவனக்குறைவு
கேள்வி: 2019 முதல் 2023 வரை ஐஸ்வர்யா கவனக்குறைவாக இருந்தது ஏன்?
பதில்: ஒரு செலிபிரட்டி என்றால் அவர்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கும். அதனால் அவர்களுக்கு இது போன்று நகைகளை சரிபார்க்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியிருக்காது. சோழிங்கநல்லூரில் வாங்கிய ரூ 95 லட்சம் வீட்டை மொத்தமாக பணம் கொடுக்காமல் 10 சதவீதம் மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்திற்கு லோன் போட்டுள்ளார். அந்த இஎம்ஐயை திருடிய நகைகளை விற்று விற்று கட்டி வந்துள்ளார்.
2 ஆண்டுகள் கழித்து ரூ 95 லட்சமும் மொத்தமாக கட்டப்பட்டு ஈஸ்வரியின் கைகளுக்கு பத்திரம் வருகிறது. ஈஸ்வரி திட்டமிட்டே இதை செய்திருந்தார். ஈஸ்வரிக்கும் ரஜினி வீட்டில் காணாமல் போன வைர மோதிரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நகைகளை மீட்க முடியுமா?
கேள்வி: ஐஸ்வர்யா ரஜினியின் நகைகளை மீட்பதில் சிக்கல் ஏன்
பதில்: நகைகள் காணாமல் போய் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. நகைகளை விற்பனைக்கு பெற்ற கடைக்காரர்கள் அப்படியே அந்த நகையை வைத்திருப்பார்கள் என சொல்ல முடியாது. இவ்வாறு செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications