தானப்பத்திரம் மூலம் நிலங்களை மாற்ற முத்திரைத்தாள், பதிவுக்கட்டணத்தில் விலக்கு.. பதிவுத்துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல அடுக்கு குடியிருப்புகள் அல்லது வணிகவளாகங்கள் கட்டும் விண்ணப்பதாரர்கள், துணைமின்நிலையம் அமைப்பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு தானப் பத்திரங்கள் மூலம் நிலங்களை மாற்றிக் கொடுக்கும்போது, அதற்கான முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுச்சமுதாயக் கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பதிவுத்துறை கூறியுள்ளது.

பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து பதிவுத்துறை ஆய்வாளர், பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: குழுமக் குடியிருப்புகள் (அடுக்குமாடி மற்றும் கேட்டடு கம்யூனிட்டி வீடுகள்) அல்லது வணிக வளாகங்கள் கட்டும் விண்ணப்பதாரர்கள், துணைமின்நிலையம் அமைப்பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு தானப் பத்திரங்கள் மூலம் நிலங்களை மாற்றிக் கொடுக்கும்போது, அதற்கான முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுச்சமுதாயக் கட்டணங்களுக்கு விலக்கு அளித்து கடந்த 2012-ல் அரசாணை வெளியானது

Exemption from stamp duty and registration fees for land transfers via gift deed Registration Dept

இந்த நிலையில் 2012 அரசாணையில் குறிப்பிட்டு இருந்த விலக்கானது தொடக்கத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. தற்போது, நிர்வாகக் காரணங்களுக்காக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணிகள், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்திய முத்திரைத்தாள் சட்டம், 1899-ன் பிரிவு 8ஏ-ன்படி, அரசு நிறுவனங்களால் அசையா சொத்துகளை மாற்றம் செய்யும்போது அதற்கு முத்திரைத்தாள் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்கானது, மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு சார்ந்த அமைப்புகளுக்கு இடையே வணிகம், சொத்துகள் அல்லது அசையா சொத்துகளின் உரிமைகளை மாற்றம் செய்வதற்கும் பொருந்தும்.

எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஏற்கனவே பொருந்தக்கூடியதாக இருந்த முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டண விலக்கானது, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம் ஆகிய நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆதலால், மேற்கூறிய நிறுவனங்களின் பெயரில் பதிவிற்காக தாக்கல் செய்யப்படும் தானப்பத்திரங்களை பதிவு செய்யும் போது, பதிவு அலுவலர்கள் மேற்கண்ட விவரங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை உள்பட தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் அல்லது சுற்றுவட்டாரங்களில் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது மிகப்பெரிய வணிக வளாகம் கட்டும்போது, அங்குள்ள மக்களுக்கு மின்சாரம் வழங்க ஒரு தனி 'துணை மின்நிலையம் அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். அப்போது தான் மின்சாரம் தடையில்லாமல் செல்ல வழிகள் கிடைக்கும். இதற்காகவே குடியிருப்புகளை மற்றும் வணிக வளாகங்களை கட்டும் பில்டர்கள் மின்சார வாரியத்திற்கு நிலத்தை தானமா எழுதிக் கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும். அப்படி நிலத்தைப் பதிவு செய்ய பல லட்ச ரூபாய் முத்திரைத்தாள் கட்டணமும், பதிவுக்கட்டணமும் பில்டர்கள் கட்ட வேண்டிய அவசியம் இருந்தது.

ஆனால் இனி பில்டர்கள் கட்ட தேவையில்லை என்பதால் பொதுமக்களாகிய நீங்கள் வாங்கும் வீட்டின் சதுர அடி விலையைக் குறைக்க பில்டர்கள் முன்வருவார்கள். அதேபோல் துணை மின்நிலையம் உங்கள் பகுதியில் பிரத்யேமாக அமைக்கப்படுவதால் லோ வோல்டேஜ் பிரச்சனையும் உங்களுக்கு வராது. எனவே இந்த அறிவிப்பு பெரிய அடுக்குமாடி அல்லது கேட்டடு கம்யூனிட்டி அல்லது ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும் இடங்களில் மனை வாங்குவோருக்கு வரப்பிரசாதம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+