ஒரு மரியாதைக்காக உங்க சொந்த விஷயத்தை பேசாம இருக்கோம்.. ஸ்ரீதர் வேம்புவிற்கு பிடிஆர் நெத்தியடி பதில்
சென்னை: பாடகர் டி எம் கிருஷ்ணா விவகாரத்தில் கருத்து தெரிவித்த சோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்புவிற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடக இசையை எல்லா மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கு கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர் இசையை மக்களிடம் கொண்டு செல்வதில் தவறு இல்லை. ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அந்த இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை. இந்த நிகழ்வை புறக்கணிக்கிறோம்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 ஆம் ஆண்டு மியூசிக் அகாடமியின் மாநாட்டில் பங்கேற்பதிலிருந்தும், டிசம்பர் 25 அன்று எங்கள் கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுவதாக நாங்கள் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
டி.எம்.கிருஷ்ணா தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
டி எம் கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். வேண்டுமென்றே மகிழ்ச்சியுடன் உள்ள சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார்.
அவரது செயல்கள் ஒரு கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதில் அவமான உணர்வைப் பரப்ப முயன்றது மற்றும் இசையில் ஆன்மீகத்தை அவர் தொடர்ந்து இழிவுபடுத்தி வந்தார். அவர் மில்லியன் கணக்கான கர்நாடக இசை கலைஞர்களை கொச்சைப்படுத்தி உள்ளார். கலைத்திறன், கடின உழைப்பு மற்றும் கர்நாடக இசையை அவமதித்து உள்ளார்.
இசையை மக்களிடம் கொண்டு செல்வதில் தவறு இல்லை. ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சனம் வைத்துள்ளனர்.
சோஹோ தலைவர் கருத்து: இது தொடர்பாக கருத்து தெரிவித்த சோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்பு, நான் கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்டிருக்க விரும்புகிறேன், டி எம் கிருஷ்ணா போன்ற ஒரு திறமையாளருடன் ஒப்பிடும்போது நான் இதில் பூஜ்ஜியம்தான்.
ஆனாலும்.. அவரது "woke " அரசியல் எனப்படும் முற்போக்கு அரசியல் செய்வது எனக்கு குமட்டலாக இருக்கிறது.அவர் உண்மையிலேயே இந்து சமுதாயத்தை சீர்திருத்த விரும்பினால், அவர் சுவாமி விவேகானந்தரிடமிருந்து தொடங்கலாம். மாறாக தர்மத்தை அழித்து இந்த தேசத்தை உடைக்க நினைக்கும் சக்திகளுடன் ஒரே படுக்கையில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று விமர்சனம் வைத்துள்ளார்.
பிடிஆர் பதிலடி; பாடகர் டி எம் கிருஷ்ணா விவகாரத்தில் கருத்து தெரிவித்த சோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்புவிற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி விமர்சனம் செய்துள்ளார்.
அதில், பல விஷயங்களில் இவருடன் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவருடைய கருத்துக்களை வெளியிடும் உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால், பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள், "தர்மத்தை அழிக்கும், இந்த தேசத்தை உடைக்கும் சக்திகள்" போன்ற இழிவான சொற்றொடர்களைத் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.
வாழ்க்கையில் அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்பதற்காகவே அவர் தன்னை தேசபக்தியின் நடுவராகவோ, தர்மத்தின் நடுவராகவோ நினைத்துக்கொள்ள கூடாது. மரியாதை கருதியே கடந்த ஆண்டு அவரது சொந்த பிரச்சனைகளை வைத்து அவரின் குணாதிசயத்தையோ நேர்மையையோ கேள்வி எழுப்பாமல் இருந்தோம்.
அவர் தனக்கு உடன்படாதவர்களை இழிவுபடுத்துவதற்குப் பதிலாக, அதே கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications