மகாவிஷ்ணு சர்ச்சை: பள்ளிகளில் ஆன்மீக பேச்சு- அரசியல் சாசனத்தின் 28-வது பிரிவு சொல்வது என்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மூடநம்பிக்கையை விதைக்கும் வகையில் பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகாவிஷ்ணு தமது பேச்சுக்ககு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர் சங்கரை மிரட்டும் போது, "அரசு பள்ளியில் ஆன்மீகம் பேசக் கூடாது என யார் சொன்னது?" என கேள்வி எழுப்பி இருந்தார். அரசு பள்ளிகளில் ஆன்மீகம் பேசக் கூடாது என்பது சரியானதுதானா? நமது இந்திய அரசியல் சாசனப் புத்தகத்தில் இது பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது? என்பது குறித்த விவாதங்கள் தொடருகின்றன.
ஆன்மீகத்தின் பெயராலானா மோசடிகள் ஏராளம்தான்.. அதிலும் நானே கடவுள். .நானே அனைத்தும் என ஏகப்பட்ட 'நடமாடும் கடவுளர்கள்' இந்த தேசத்தில் உலாவுகின்றனர். நானே சிவன் என பிரசங்கம் செய்து ஏடாகூட சர்ச்சைகளில் சிக்கி பல ஆண்டுகளாக தலைமறைவாகி இருப்பவர் நித்தியானந்தா. இவரது பாணியைப் பின்பற்றி நானே மஹா விஷ்ணு, நானே மஹாகுரு என பிரசங்கம் செய்து வெளிநாடுகளிலும் கிளை பிரப்பியிருப்பவர்தான் மகா விஷ்ணு.

ஆசிரியரை மிரட்டிய மகாவிஷ்ணு: சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில், பாவம் புண்ணியம், மறுஜென்மம் குறித்து கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டார். அதில் முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் மாற்றுத் திறனாளிகள் என அடித்துவிட அப்போது சங்கர் என்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் கோபம் கொப்பளிக்க எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ஆசிரியர் சங்கரை மிரட்டிய மகாவிஷ்ணு, அரசு பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது என யார் சொன்னது? என எகத்தாளமாக கேள்வி எழுப்பி இருந்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையாகி தற்போது மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றும் கூட மகாவிஷ்ணு மீது போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
என்ன சொல்கிறது அரசியல் சாசனம்? : இது ஒரு புறம் இருக்கட்டும்.. மகாவிஷ்ணு, ஆசிரியர் சங்கரை மிரட்டுகிற போது, பள்ளிகளில் ஆன்மீகம் பேசக் கூடாதா? என கேள்வி எழுப்பி இருந்தார் அல்லவா? அது தொடர்பாக இப்போதும் விவாதம் நடைபெறுகிறது.
கல்வி நிறுவனங்களில் ஆன்மீகம் தொடர்பாக நமது இந்திய அரசியல் சாசனம் என்னதான் சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
"இந்திய அரசுக்காக தமிழ்நாடு அரசின் சட்ட (ஆட்சி மொழிப் பிரிவு) துறை 2009-ல்
வெளியிட்ட "இந்திய அரசமைப்பு" புத்தகத்தின் அடிப்படையில் இந்த தரவுகள் எழுதப்படுகின்றன.
இந்திய அரசியல் சாசனத்தின் 28-வது பிரிவுதான் கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த நடவடிக்கைகளை விவரிக்கிறது. அதில் இடம் பெற்றிருப்பதாவது:
1) முழுமையாக அரசு நிதியுடன் செயல்படுகிற கல்வி நிறுவனங்கள் எதிலும் மத போதனைகள் செய்யக் கூடாது (No religious instruction shall be provided in any educational institution wholly maintained out of State funds.)
2) அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனமானாலும் அறக்கட்டளைகள் அல்லது வாரியங்களால் உருவாக்கப்பட்டிருந்தால் அவற்றுக்கு மேலே சொன்ன பிரிவு பொருந்தாது. (Nothing in clause (1) shall apply to an educational institution which is administered by the State but has been established under any endowment or trust which requires that religious instruction shall be imparted in such institution.)
3) அரசு நிதி உதவி பெறுகிற அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஒருவர் பங்கேற்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இத்தகைய மதம் சார்ந்த நடவடிகைகளில் பங்கேற்க மைனர் (Minor) காப்பாளர்கள் ஒப்புதல் (parents/ guardian) ஒப்புதல் தேவை. (No person attending any educational institution recognised by the State or receiving aid out of State funds shall be required to take part in any religious instruction that may be imparted in such institution or to attend any religious worship that may be conducted in such institution or in any premises attached thereto unless such person or, if such person is a minor, his guardian has given his consent thereto.)
அரசியல் சாசன விரோதமே: இப்படித்தான் இந்திய அரசியல் சாசனத்தின் 28-வது பிரிவு வரையறுத்துள்ளது. அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறுகிற கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு இடமே இல்லை; அரசு கட்டுப்பாட்டில் உள்ள மதம் சார்ந்த அறக்கட்டளைகள், வாரியங்கள் நடத்துகிற் கல்வி நிறுவனங்களுக்கு இது பொருந்தாது; ஆனாலும் அதில் மைனர்கள் பங்கேற்க பெற்றோர் ஒப்புதல் தேவை என்கிறது இந்திய அரசியல் சாசனம். ஆக இந்திய அரசியல் சாசனத்தின் படி மகாவிஷ்ணு சென்னை அரசு பள்ளியில் மதம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசியல் சாசன விரோதமானது; இந்த அடிப்படையைக் கூட தெரிந்து கொள்ளாமல் அவரை அழைத்த தலைமை ஆசிரியரின் நடவடிக்கையும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதுதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications