பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.. கூடுதலாக நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2,25,400 ஆசிரியர்களும், 52,75,203 மாணவர்களும் பயின்று வருகின்றனர். மாநில அரசு, அரசு பள்ளிகளை பாதுகாக்க தொடர்ந்து பல சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல அரசு பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிகள் அளவிற்கு உயர்த்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

இந்த திட்டங்கள் மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்த்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை கணிசமான அளவில் அதிகரித்து வந்தது. இதற்கு கொரோனா தொற்றும் மிகப்பெரிய காரணமாக இருந்தது. கொரோனா தொற்று காலத்தில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் ஏரளாமான தொழில்கள் முடங்கின. எனவே தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து படிக்க வைக்க முடியாமல் பெற்றோர் திணறினர். எனவே அரசு பள்ளிகளை நோக்கி அவர்கள் நகர்ந்தனர். இதன் காரணமாக மாணவர் சேர்க்கை அதிகரித்தது.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3,000 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல கடந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இதனால் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களின் பணிக்காலம் 2022ம் ஆண்டு மே மாதம் முதல் 2023ம் ஆண்டு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இவர்களின் பணிக்காலம் நேற்றுடன் (மே.17) முடிவடைந்தது. இருப்பினும் இவர்களுக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்வதாக பள்ளக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான சரியான ஊதியமும் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள விரைவு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இவ்வாறு நியமிக்கப்படுவது வரவேற்கதக்கது என்றும், இருப்பினும் தங்களுக்கு அரசு பணி உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அல்லது அரசு பணிகளில் முயற்சிக்கும்போது இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications