இல்லாத பாடலை ‘திருக்குறள்’ என்று பரப்புவது மன்னிக்க முடியாத செயல்.. ஆளுநர் மீது ப.சிதம்பரம் தாக்கு!
சென்னை: காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை குறள் என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை சார்பில் வழங்கப்பட்ட நினைவுப்பரிசில், திருக்குறள் எனக் கூறி திருவள்ளுவர் எழுதாத ஒன்றை அச்சிட்டு வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேசிய மருத்துவ தினத்தையொட்டி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மருத்துவர் தின விழா நடந்தது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதை தொடர்ந்து ஆளுநரின் எண்ணித் துணிக மருத்துவ ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு ஆளுநர் மாளிகை சார்பில் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக சேவையாற்றிய 50 மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அந்த கேடயங்களில் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்தது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அதில் 944 ஆவது திருக்குறள் என, ''செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு'' என்பது அச்சிடப்பட்டு அதற்கு கீழே, திருவள்ளுவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது, தற்போது சர்ச்சையாகி தமிழறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுவர் எழுதிய 1330 குறட்பாக்களில் ஆளுநர் மாளிகை குறிப்பிட்ட திருக்குறளை எப்படி தேடினாலும் கிடைக்காது. ஏனென்றால் அப்படி ஒரு குறளே இல்லை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ், திருக்குறள் என்று பேசி வரும் நிலையில், இல்லாத திருக்குறளை அச்சிட்டு விருது வழங்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
சிறந்த மருத்துவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுத்த விருதில் போலி 'குறள்' பொறிக்கப்பட்டிருந்தது மன்னிக்க முடியாத செயல் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "13-7-2025 அன்று 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூலைத் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது.
அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி 'குறள்' பொறிக்கப்பட்டிருந்தது என்பது தான் அதிர்ச்சிச் செய்தி.
'குறள் 944' என்று பொறிக்கப்பட்ட 'குறள்' திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரிய வருகிறது. குறள் 123 லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல்.
காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை 'குறள்' என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல். போலிச் சித்திரம், போலிக் குறள் ....இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்?" எனத் தெரிவித்துள்ளார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications