கப்புனு.. பக்கத்தில் இருந்த பெண்ணை தூக்கிய பிரபல நடிகர்.. தியேட்டர் வாசலில் சவுண்டு.. வயிறெரியுதாமே
தியேட்டர் வாசலில் கூல்சுரேஷ் பரபரப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்
சென்னை: வழக்கம்போலவே, இப்போதும் கூல்சுரேஷ் தியேட்டர் முன்பு நின்று, பரபரப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. இதனால், பொதுமக்கள் அங்கே திடீரென கூடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில், வில்லன், காமெடி ரோல்களில் நடித்து வருபவர் கூல் சுரேஷ்... பல வருட காலம் சினிமாவில் இருந்தாலும், சூரி, யோகி பாபு, ரோபோ ஷங்கர் போன்ற சமீபத்திய நடிகர்களின் வருகையால், இவரை போன்ற நடிகர்கள் வெளியே தெரியாமலேயே போய்விட்டார்கள்..
இதனால், கூல் சுரேஷுக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.. சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் கூல் சுரேஷ்...

கத்தல்
தனக்கென யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.. திடீரென அதில் ஸ்பாட்டுக்கே சென்று சினிமாக்களை விமர்சனம் செய்து அசத்துவார்... முதல் நாள், முதல் காட்சிக்கே சினிமா தியேட்டர் வாசலில் நின்று விமர்சனம் தந்து, பொதுமக்களின் கவனத்தை தன்மீது குவித்து வருகிறார்.. சிம்புவின் தீவிர ரசிகரான இவர், சிம்புவை பற்றி பேசாமல் எந்த பேட்டியையும் முடித்தது கிடையாது.. வெந்து தணிந்தது காடு படத்துக்காக இவர் தந்த புரோமோஷன் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது..

cool சுரேஷ்
மேலும் இவர் ஒரு பிரபலம் என்பதால், இவர் எங்கு சென்றாலும் அங்கே ஒரு கூட்டம் கூடிவிடும்... கலகலப்பாக பேசுவார்.. ஆதங்கமாக பேசுவார் என்றாலும், தன்மீதான விளம்பரத்தை தேடிக் கொள்ளவே பேசுகிறார் என்ற விமர்சனமும் இவர்மீது இருக்கிறது.. அப்படித்தான், காபி வித் காதல் படம் வெளியாகி உள்ள நிலையில், முதல்நாளே படத்தை பார்க்க வந்துவிட்டார்.. வழக்கமாக படத்தை பற்றி விமர்சனம் செய்யும் கூல்சுரேஷ், திடீரென ஏன் இந்த படத்தில் தனக்கு சான்ஸ் தரவில்லை என்று, தியேட்டர் வாசலிலேயே நின்று டைரக்டருக்கு கேள்வி எழுப்பிவிட்டார்..

ஜீவா எங்கே
அத்துடன், யாரோ பக்கத்தில் நின்றிருந்த ஒரு இளம்பெண்ணையும் அலேக்காக இரு கைகளிலும் தூக்கி நின்றது, அதற்கு மேல் அங்கிருந்தோரை திரும்பி பார்க்க செய்தது. செய்தியாளர்களிடம் கூல்சுரேஷ் ஆதங்கத்தை கொட்டி பேசியது இதுதான்: காபி வித் காதல் படம் பார்க்க வந்தேன்.. இந்த படத்தை பார்த்ததுமே எனக்கு வயிறெல்லாம் எரியுது.. ஒரே வயித்தெரிச்சலா இருக்கு.. இப்படி ஒரு பிரமாண்டமான படத்தில், ஏகப்பட்ட பேர் நடிச்சிருக்காங்க.. ஆனால் கூல் சுரேஷை கூப்பிடவேயில்லை.. ஏன் கூப்பிடல? ஏன் நான் நடிக்க கூடாதா?

தியேட்டர் வாசல்
சுந்தர் சி.சார், இந்த காபி வித் காதல் படத்தில், கூல் சுரேஷ் நடிக்க கூடாதா? எனக்கு உங்க படத்தில் வாய்ப்பு தர மாட்டீங்களா? விச்சு சார், நீங்கதானே சுந்தர் சி கூடவே இருக்கீங்க.. எனக்கு வாய்ப்பு தர சொல்லி அவர்கிட்ட சொல்லக்கூடாதா? மேனேஜர் சார், நீங்களும் இந்த படத்தில் வேலை பார்த்து இருக்கீங்களே, எனக்கு ஏன் சான்ஸ் தர சொல்லி கேட்கவில்லை? ஹிட் படத்தில் கூல் சுரேஷ் நடிக்க கூடாதா? கடைசிவரை இப்படியே கேட் வாசலில் நின்று கத்தி கொண்டுதான் இருக்கணுமா? ஆமா, கத்துவேன், படத்துக்காக கத்துவேன்.. தியேட்டரில் வந்து கத்துவேன்..

கலகலகல
எனக்கு வாய்ப்பு தராவிட்டால் இப்படித்தான் கத்துவேன்.. இப்பவும் சொல்றேன், எஸ்டிஆரின் பத்து தல, காபி வித் காதல் எட்டு தல.. எஸ்டிஆரின் பத்து தல, கூல்சுரேஷ் சொட்டை தல.. இன்னைக்கு காப்பி வித் காதல் படம் நல்லா இருக்கு.. ஸ்ரீகாந்த் படம் பார்க்க உள்ளே போயிருக்கார்.. ஜெய் வந்திருக்கிறார்.. ஆனால், ஜீவா ஏன் வரல படம் பார்க்க? ஆர்பி சவுத்ரி என்ற பெரிய தயாரிப்பாளர் மகனா இருக்கீங்க.. ஒரு தயாரிப்பாளரின் வலி என்னவென்று உங்களுக்கு தெரிய வேணாமா? ஏன் ஜீவா படம் பார்க்க வரல? நீங்க ஹாலிவுட் படத்துல கூட நடிக்க போயிருக்கலாம்.. ஆனால், இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

ஜலஜலஜல
நீங்க என்னுடைய நண்பராக இருக்கலாம், ஆனால், எப்பவுமே நான் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும்தான் சப்போர்ட் செய்வேன்.. ஜீவா, நீங்க செய்வது தவறு.. இதோ என் பக்கத்துல நிற்கிற இந்த பொண்ணு சொல்லுது, காப்பி வித் ஜலஜலஜலன்னு சொல்லுது.. இந்த பொண்ணை கேமராவில் காட்டுங்கப்பா (டக்கென அந்த பெண்ணை இரு கைகளாலும் அலேக்காக தூக்குகிறார் கூல் சுரேஷ்) காப்பி வித் ஜலஜலஜலன்னா என்னம்மா அர்த்தம்.. இந்த படத்தில் ஏகப்பட்ட பெண்கள் நடித்திருக்காங்க.. 100 பெண்கள் இருக்காங்க போல.. எல்லாரும் வந்து இந்த படத்தை பாருங்க.. வயிற்றெரிச்சலோடு சொல்றேன், எல்லாரும் இந்த படத்தில் நடிச்சிருக்காங்க.." என்றார் கூல் சுரேஷ். இந்த வீடியோதான் ஷேர் ஆகி வருகிறது..

சான்ஸ்ஸா?
இப்படித்தான், நடிப்பதற்கு சான்ஸ் கேட்பதா? இப்படி விளம்பரம் தேடினால் மட்டும் சான்ஸ் கிடைத்துவிடுமா? சம்பந்தப்பட்ட நடிகர்கள் நண்பர்கள் என்றால், அவர்களிடமே போனை போட்டு உரிமையாக கண்டிக்காலாமே? எதற்காக பொதுவெளியில் குற்றஞ்சாட்ட வேண்டும்? லைம்லைட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசுவதா? என்று இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். மற்றொருபக்கம், கலைஞனின் வேதனை குமுறல் இது.. இதுபோன்று எத்தனையோ பேர்கள் வாய்ப்பின்றி வாழ்வாதாரம் இல்லாத நிலையில், கூல் சுரேஷ் போன்றவர்கள் அவர்களின் குரலாக ஒலித்து வருகிறார் என்று சப்போர்ட்டு குரலும் எழுந்து வருகிறது.. ஆக மொத்தம் கூல் சுரேஷ் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications