Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகர் சரத்குமார் ஒரே போடு..காட்பாடி தியேட்டர் வாசல்ல, தன்மானத்தை இழந்து, பிரியாணி சாப்பிடணுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்மானத்தை இழந்து இலவசம் பெறுவது சரிகிடையாது என்று காட்பாடி இலவச பிரியாணி விவகாரம் குறித்து சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

வேலூர் காட்பாடியில் ஆஸ்கார் தியேட்டர் எதிரில் "தம்பி பிரியாணி" கடை திறக்கப்பட்டது... புதுக்கடை திறப்பு விழா என்பதால், சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம், ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் மேலும் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிக்கப்பட்டது.

Famous Actor Sarathkumar says about Katpadi Biriyani Shop issue and advises the public

இந்த அறிவிப்பு சுற்றுவட்டார பகுதிகளில் தீயாய் பரவியது.. இதனால், பொதுமக்கள் ஏராளமானோர் அந்த கடை முன்பு திரண்டனர்.. அதாவது, கடையிலிருந்து வரிசையாக ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் கால்கடுக்க காத்திருந்தனர்..

டிராபிக் ஜாம்: இறுதியில் பிரியாணி வாங்கிக்கொண்டுதான் போனார்கள்.. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மிகப்பெரிய சிக்கலாக மாறிவிட்டது.. டிராபிக்கை சீர் செய்ய முடியாமல் போலீசார் திணறினார்கள்.. அந்த நேரம்பார்த்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அந்த வழியாக வந்தார்..

மக்கள் வெயிலில் அவதிப்படுவதையும், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் பார்த்து கோபமடைந்து "பிச்சையா போடுறீங்க" என்று சத்தம்போட்டு, கூட்டத்தை கலைக்கச் சொல்லி உத்தரவிட்டார்..

மூடுவிழா: அவரது அறிவுறுத்தலின்படி, கூட்டம் கலைக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல், மாநகராட்சியில் தொழில் உரிமம் பெறாமல் துவங்கப்பட்டதாக தெரிவித்து அந்த பிரியாணி கடையை மூடச்சொல்லியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படியே, திறப்பு விழா அன்றே மூடுவிழாவும் நடந்து முடிந்தது.

வேலூர் மாவட்டத்தில் நடந்த இந்த செயல்கள் அனைத்துமே சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், இதுகுறித்து வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:

சலுகைகள் மோகம்: புதிய கடைகள் திறப்பின் போது சலுகைகள் வழங்குவது வழக்கம் . ஆனால், பிரியாணி இலவசம் என்பதற்காக காட்பாடி முதல் வேலூர் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது என்றால் மக்களின் இலவச மோகத்தை சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

கூட்டத்தை கண்ட வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சியில் தொழில் உரிமம் பெறாமல் துவங்கப்பட்டதாக தெரிவித்து கடையை மூடச் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் பொதுமக்களை வலுக்கட்டாயமாக கலைந்து செல்லச் செய்யும் சூழல் காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் மக்களின் மனநிலை, இலவசத்தின் மீதான ஆர்வம், கலெக்டர் வருகை புரிந்து கூட்டத்தை கலைந்து செல்ல கடையை மூட முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அனைத்தும் தலைகுனிவான செயல்.

Famous Actor Sarathkumar says about Katpadi Biriyani Shop issue and advises the public

இலவசங்கள்: கடை உரிமம் பெற்று திறக்கப்பட்டதா? பிரியாணி சுவையானதாக இருக்குமா? சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்றெல்லாம் பாராமல் நீண்ட வரிசையில் தயங்காமல் காத்திருந்து பெறலாம் என்றால் அந்த இலவசத்தில் இருக்கும் மோகம் என்ன? பொதுமக்கள் என்னிடம் கேட்கலாம், உங்களுக்கென்ன வசதியுடன் வாழ்கிறீர்கள். இலவசம் உங்களுக்கு தேவையல்ல, எங்களின் தேவை என்று கூறலாம். ஆனால் அப்படியல்ல.

தன்மானத்தை இழந்து கிடைக்கும் இலவசம் பெறுவது சரியல்ல. நாம் உழைத்து கடின உழைப்பால், முயற்சியால் ஈட்டுகின்ற பொருளைக்கொண்டு உண்ணுகின்ற உணவுதான் சிறப்பு என்று சிந்திப்பவன் என்பதால் நான் இதனை தெரிவிக்கிறேன்.

வறுமைக்கோடு: வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டப்பணிகள் வாயிலாக தேவைகள் பூர்த்தி அடையும். ஆனால், அனைவரும் இலவசத்திற்காக இப்படி நின்றதை பார்த்து பெரும் தலைகுனிவாக எண்ணி வருந்துகிறேன். தன்மானத்தை இழந்து, சுயமரியாதை விடுத்து கிடைக்கும் அத்தியாவசியமற்ற இலவசத்தை இனியாவது தவிர்த்திடுங்கள்" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+