விடிந்தால் தீபாவளி.. சத்யராஜ்ஜின் மகள், திவ்யா சொல்றதை கேட்டீங்களா? அந்த நேரத்தில் கோழிக்கறி வேணாமே?
சென்னை: தமிழகம் முழுவதும் நாளைய தினம், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரபல நடிகர் சத்யராஜ் மகள், டாக்டர் திவ்யா சத்யராஜ் முக்கிய அட்வைஸ் ஒன்றினை தந்துள்ளர்.
நாளைய தினம் தீபாவளி பண்டிகை, தமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. இதனால், பொது இடங்கள் மற்றும் கடைத்தெருக்களில், மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.. மற்றொருபக்கம் சொந்த ஊர்களுக்கும் பொதுமக்கள் பயணமாகி வருகிறார்கள்.

விதிமுறைகள்: இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் பட்டாசு விற்பனை தொடர்பான கட்டுப்பாடு விதிமுறைகளைச் சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, நாளை தீபாவளியன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 வரை என மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்.. தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.. பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகள்: அதேபோல, விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காகத் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 102 காவல் நிலையங்களிலும், எஸ்.ஐ. தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய தனிப்படை சென்னை காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து, பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான டாக்டர் திவ்யா சத்யராஜ் சில முக்கிய அறிவுரைகளை தெரிவித்துள்ளார். மருத்துவ ரீதியாக என்ன மாதிரி பிரச்சனைகள் வரலாம்? அவைகளிலிருந்து தப்பிக்க கையாள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்தும் திவ்யா, ஒரு சேனலுக்கு விலாவரியாக பேட்டி தந்துள்ளார்.
கோழிக்கறி: அதில் டாக்டர் திவ்யா சொல்லும்போது, "பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம். குறிப்பாக, இருமல், தும்மல், கண், சருமம் ஆகிய அலர்ஜியை சிலர் சந்திக்கலாம். இந்த மாதிரி அலர்ஜி வந்தால் உணவு வகைகளில் தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, மீன், இறால், கோழிக்கறி, செயற்கை பொடி வகை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கண்ணில் வரும் அலர்ஜியை தவிர்க்க குளிர்ந்த தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். பியூட்டி பார்லர்களக்கு சென்று சரும பராமரிப்பு, மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சம்பழம்: வழக்கமாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அது தவறு... எலுமிச்சையை முகத்தில் தேய்ப்பதால் தோல் உரிவதுடன், அரிப்பையும் ஏற்படுத்தும். இயற்கையான பொருள் தானே என்று எலுமிச்சையை நாம் கருதக்கூடாது. கிச்சன் பொருட்களை சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அலர்ஜி ஏற்பட்டால் 10 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை இருக்கும்.. மருத்துவர்களை அணுகி அலர்ஜி எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி எடுத்துக் கொள்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் அது உதடு, நாவை வற்ற வைக்கும்.
கண்ணாடி: பட்டாசு புகைகளில் இருந்து அலர்ஜி எதுவும் அண்டாமல் இருக்க வாய், மூக்கு பகுதிகளை மறைக்கும்படி முக கவசம், கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு கை மற்றும் முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும் என்று டாக்டர் திவ்யா அறிவுறுத்தியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications