குட்டி பத்மினி மேட்டரை சொல்லட்டா? ஜெயலலிதா வீட்டில் ஜெய்சங்கர்?.. அந்த "பா" டைரக்டர் மனைவி.. என்னவாம்
சென்னை: பிரபல நடிகை குட்டி பத்மினிக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. அத்துடன், முக்கிய கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டு, அது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது?
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பிரபல சீனியர் நடிகை குட்டி பத்மினி தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோ பகிர்ந்திருந்தார். அதில், ஜெயலலிதா, ஜெய்சங்கர், எம்ஜிஆர் ஆகியோரை பற்றி கூறி, ஒரு சம்பவத்தையும் பதிவு செய்திருந்தார்.
"நீ என்ற படத்தில் ஜெயலலிதா அக்காவும், ஜெய்சங்கர் அங்கிளும் ஒன்னா ஆக்ட் பண்றாங்க... ஜெயலலிதா அக்காவுக்கு யாராவது இங்கிலீஷ் நல்லா பேசுனா ரொம்ப பிடிக்கும். ஜெய்சங்கர் நல்லா பேச, அவங்க இரண்டு பேருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவாகுது. "யார் நீ" படத்திலும் தொடர்ந்து நடிக்கும்போது அவங்களுக்கு இடையில் நட்பு வலுப்படுகின்றது.

எம்ஜிஆர்: ஸ்டுடியோவில் இருக்கும்போது ஒரு சேர்ல கால் மேல் கால் போட்டு புஸ்தகம் வாசிச்சுக்கிட்டு யாரிடமும் பேசாத அம்மு அக்கா, ஜெய்சங்கர் அங்கிளிடம் மட்டும் அடிக்கடி கலகலனு பேச ஆரம்பிக்கிறாங்க. சிரிச்சு சிரிச்சு பேசுறாங்க, அவரும் ஏதாவது பதிலுக்கு பேசுறாங்க. இது எப்படியோ கிசுகிசுவாக, புரட்சித் தலைவர் அவர்களின் காது வரைக்கும் போய்டுச்சு..
ஒரு நாள் அவர் ஜெய்சங்கர் அங்கிள் ஜெயலலிதா அக்கா வீட்ல இருக்கிறதா நினைச்சுக்கிட்டு, கோபத்தோடு வந்துடுறாரு... ஆனா அந்த வீட்ல ஜெய்சங்கர் அங்கிள் அந்த நேரம் நல்ல வேளை இல்லை... இருந்திருந்தால் அன்று ஜெய்சங்கர் அங்கிளை அவர் என்ன செய்திருப்பாரோ?" என்று கூறியிருந்தார்.
ஜெய்சங்கர்: குட்டி பத்மினியின் இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் அப்போது ஏற்படுத்தியிருந்து. ஒருபக்கம் ஜெய்சங்கர் ரசிகர்கள், மறுபக்கம் எம்ஜிஆரின் ரசிகர்கள் என திரண்டுவந்து கண்டனங்களை பதிவு செய்தனர்.
"ஜெய்சங்கர் பி.எல். படித்தவர். அந்த காலகட்டத்தில் வக்கீல் படிப்பு சிறப்பானதுதான். அவர் அதிகம் படிக்கவில்லை என்று கூறி விட்டீர்களே?" என்று ஆதங்கத்துடன் கேள்வி கேட்டதுடன், இவர்கள் 2 பேருமே ஜீனியஸ்.. அதுவுமில்லாமல், ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களை, எப்படி பொதுவெளியில் பகிரலாம்? தவறாக பேசாதீங்க.. எம்ஜிஆரிடம் இருந்த நல்ல குணத்தை சொல்ல உங்களுக்கு மனசு வரல. எம்ஜிஆர் இல்லை என்ற தைரியத்தில் பேசுவது கண்டிக்கத்தக்கது" என்று கொந்தளித்திருந்தனர்.
இந்நிலையில்தான், எம்ஜிஆரின் நற்பண்புகளை தொடர்ந்து வெளிபடுத்தி வரும் இதயக்கனி பத்திரிகையின் ஆசிரியருமான இதயக்கனி விஜயன், குட்டி பத்மினியை எச்சரிக்கிறேன் என்ற பெயரில் இதற்காகவே பிரத்யேகமாக ஒரு வீடியோ வெளியிட்டு, கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், ஜெய்சங்கர் குடும்பத்தினரிடமே நேரடியாக பேசி, அந்த வீடியோவை நீக்க செய்ய சொல்லியிருந்தார்..
குட்டி பத்மினி: எதிர்ப்புகள் அதிகமாகவும், குட்டி பத்மினி அந்த வீடியோவை அடுத்த சில தினங்களில் நீக்கியும் விட்டார்.
ஆனாலும், தனிமனித தாக்குதல்களும், சக நடிகர், நடிகைகளின் மீதான தனிப்பட்ட ரகசியங்கள், அவதூறுகளை தொடர்ந்து தெரிவித்து வருவதாக, இதயக்கனி விஜயன் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக தற்போது இன்னொரு வீடியோவையும் பதிவிட்டு, மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் சொல்லியிருப்பதன் சுருக்கம் இதுதான்:
"சக கலைஞர்களை பற்றி பொதுவெளியில் தரக்குறைவாக பேசுவது, அவர்களின் இமேஜை சீர்குலைப்பது, தவறான தகவல்களை சொல்வது என்று தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் குட்டி பத்மினி.. இதெல்லாம் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிவது போல.. இதே குட்டி பத்மினி எம்ஜிஆரை பற்றி உயர்வாகவும் பேசியிருக்கிறார்.. இழிவாகவும் பேசுகிறார்.. அப்படியானால் இதில் எது உண்மையான பேச்சு?
இதே தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. 'பா' எழுத்து டைரக்டரின் மனைவி, வேறொரு நபருடன் போய்விட்டார்.. ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கும் அந்த விஷயம் தெரியும். ஆனாலும், அதை பகிரங்கப்படுத்தவில்லை.. இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றன..
வீடியோ பதிவு: ஒரு பத்திரிகையாளர் என்றால், இதையெல்லாம் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று அவசியமில்லை. தேவையில்லாத விஷயமாக இருந்தால், அல்லது தனிப்பட்ட ஒருவரின் கவுரவம், மரியாதையை கருத்தில் கொண்டு, அதை கடந்தும் சென்றுவிடுகிறோம். இதே குட்டி பத்மினி பற்றி எவ்வளவோ குறைகளை சொல்ல முடியும்..
அதெல்லாம் என்னவென்றும் எங்களுக்கு தெரியும். ஆனாலும், அதை கடந்து செல்ல நினைக்கிறோம். எங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை..
இப்போதும்கூட, அவர் வெளியிடும் வீடியோக்களில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்தும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என யாராக இருந்தாலும் சரி, கலைஞர்களை தேவையில்லாமல் அவமதிப்பதை கண்டிக்கிறோம். பரபரப்புக்காக இதுபோன்ற உண்மையில்லாத மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிட்டு வருவதை குட்டி பத்மினி இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும்.
கோரிக்கை: சக கலைஞர் என்றில்லை, யாராக இருந்தாலும், ஒருவரை பற்றி ஆதாரங்கள் இல்லாமல் பொதுவெளியில் பகிர்வது தவறு.. அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை பதிவு செய்து அதைவிட தவறு.. இனியாவது, இந்த போக்கை குட்டி பத்மினி நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுக்கிறேன்" என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் இதயக்கனி விஜயன். இந்த வீடியோவிற்கு அந்தந்த நடிகர்களின் ரசிகர்களும் திரண்டு வந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications