"181" இருக்காமே.. ஈஸி இல்லை.. இந்த நம்பரை தட்டுங்க போதும்.. மேடையிலேயே சொன்ன சாய் பல்லவி.. என்னவாம்
நிர்பயா மையம் குறித்து நடிகை சாய்பல்லவி பேசிய பேச்சு இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது
சென்னை: நிர்பயா மையம் குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நடிகை சாய் பல்லவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
181 உதவி எண் பெண்களுக்காக சமூக நலத்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. ஏற்கனவே பெண் காவலர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், உடனடியாக அந்த வாகனம் அந்த இடத்திற்கு சென்றுவிடும்.. அதுபோல பலத்திட்டங்கள் பெண்களுக்காக செயல்பட்டு வருகிறது..

கவுன்சிலிங்
இந்த திட்டம் ஒரு வருடத்துக்கு முன்பு, கமிஷனர் ஆபீசில் தொடங்கப்பட்டது.. கவுன்சிலிங் சென்டர் மூலம் 500 பேருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதில், 134 பேருக்கு பாசிட்டிவ்வாக கவுன்சிலிங் நடத்தப்பட்டது.. இதை தவிர வீட்டிற்கே சென்று கவுன்சிலிங் கொடுப்பதற்கு ஏற்பாடும் நடந்து வருகிறது.. சென்னை, எழும்பூரில் நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்றைய தினம் நடந்தது.

நடிகை சாய் பல்லவி
இந்த விழாவில் சமூக நலன் துறை அமைச்சர் கீதாஜீவன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் நடிகை சாய் பல்லவி பேசியது, உத்வேகத்தை தரக்கூடியதாக இருந்தது.. சாய்பல்லவி பேசியதாவது, "நிர்பயா மையம் திறப்பு விழாவில் பங்கேற்றது ரொம்பவே மகிழ்ச்சி.. இந்த மையத்தில் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்த உடனே, நடவடிக்கை எடுப்பது அதைவிட மகிழ்ச்சியாக உள்ளது.. இந்த மையம் குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஜஸ்ட் ஒரு நம்பர்
சிறிய வயதில், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இன்னொருத்தரிடம் சொல்லலாம் என்பதே மிகப்பெரிய ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் தங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை நடந்தால், அந்த பிரச்சினையை யாரிடம் சொல்ல முடியாமல் மனவேதனைக்கு எத்தனையோ பிள்ளைகள் ஆளானார்கள்.. அந்த எண்ணிக்கை அப்போதெல்லாம் அதிகமாகவே இருந்தது.. ஆனால், இன்று அப்படி இல்லை.. ஒரே ஒரு நம்பர் தட்டினால் போதும், தங்களது மன வேதனைகளை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்...

சாய் பல்லவி
இது திட்டம் அவ்வளவு ஈஸி கிடையாது.. மன்னிச்சுடுங்க.. கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் எனக்கு இந்த திட்டம் பற்றியே தெரியவந்தது.. இது இன்னும் நிறைய பேருக்கு தெரிய வேண்டும்.. இதன்மூலம் பல நபர்கள் பயன்பெறுவார்கள்.. அதிலும் தினமும் 500 போன்கால்கள் வருகிறது என்பது சாதாரண விஷயம் கிடையாது.. இதில், வேண்டுமென்றே விளையாட்டுக்கு யாராவது போன் செய்யலாம்.. எனினும் அதையும் சகிப்புத்தன்மையுடன் அணுகி, பொறுமையாக பதிலளிக்க வேண்டி உள்ளது.. இதையெல்லாம் அவங்களால அவ்வளவு தாங்கிக்க முடியுமான்னு தெரியல.. இதை அனைத்து தரப்புக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே முதன்மையான வேண்டுகோள்' என்றார்.
-
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications