பிரபல டைரக்டர் விக்ரமன் வீட்டு வாசற்படியிலேயே.. சட்டையை வச்சி, முகத்தை மூடிக்கிட்டே போனாங்களாமே..?
சென்னை: பிரபல டைரக்டர் விக்ரமன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணோமாம்.. இதுகுறித்து போலீசாரும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
சூரியவம்சம், புதுவசந்தம், பூவே உனக்காக உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபல டைரக்டர் விக்ரமன்.. சென்னை அசோக் நகர் 53வது தெரு பகுதியில் வசித்து வருகிறார்..

விக்ரமனின் நெருங்கிய உறவினர் பெண்ணான ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த ருக்குமணி என்பவர் அடிக்கடி இயக்குநர் விக்ரமன் வீட்டுக்கு குடும்பத்தோடு வந்து செல்வது வழக்கம்.
அப்படித்தான், கடந்த 3 ம் தேதி காலை 9.30 மணியளவில் ருக்குமணி, விக்ரமன் வீட்டுக்கு, தன்னுடைய டூவீலரில் வந்துள்ளார்.. பிறகு காலை 11 மணியளவில் ருக்குமணி வீட்டுக்கு திரும்பி செல்வதற்காக பைக்கை எடுக்க வெளியே வந்தார்.. அப்போது, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது வாகனம் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. பிறகு விக்ரமனிடம் இதை சொல்லவும், அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தார்..
அப்போது, 2 இளைஞர்கள் சட்டையால் முகத்தை மூடி வந்து பைக்கை திருடி செல்வது வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து ருக்குமணி குமரன் நகர் போலீசில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக தந்துள்ளார்.. ஆக்டிவா ஸ்கூட்டரின் நம்பர் ((Honda Activa - brown colour - TN09CD0252)).. புகாரின் பேரில் குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள விக்ரமன், "நேற்று முன்தினம் என் உறவினர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். காலை 9.30 மணிக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டியில் வந்தார்கள். வீட்டிற்கு வந்து என் மனைவியை பார்த்துவிட்டு திரும்பி வெளியே சென்றபோது ஸ்கூட்டரை காணவில்லை.
அருகில் இருந்த சிசிடிவியை பார்த்தபோது 2 நபர்கள் சட்டையால் முகத்தை மறைத்தபடி வந்து பூட்டப்பட்டிருந்த ஸ்கூட்டரை உடைத்து திருட்டுத் தனமாக எடுத்துச் சென்றது தெரிய வந்தது" என்றார். மேலும் போலீஸ் கண்டுபிடித்து தருவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளதாக தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications