பிரபல ஓட்டல் பீப் பிரியாணி.. கிண்ணத்தில் மட்டன் குழம்பு! சென்னை ஆபீசர் வந்ததுமே மொத்த பேரும் எஸ்கேப்
சென்னை: கெட்டுப்போன உணவு புகார் அளிக்க, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறைக்கு 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம், அல்லது https://foscos.fssai.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்று ஏற்கனவே அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படியிருந்தும், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது சில ஓட்டல்களில் தொடர்ந்து நடக்கிறது. அதிலும் சென்னை மாநகரத்தில் புகழ்பெற்ற ஓட்டலில் நடந்த சம்பவம், மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.
கடந்த சில காலமாகவே, பிரபலமான ஹோட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை பயன்படுத்துவதாக புகார்கள் கிளம்பி வருகின்றன.. இதையடுத்து, உணவுத்துறை அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட இடங்களுக்கே நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

கெட்டுப்போன இறைச்சி
ஓட்டல்கள் என்றில்லாமல், நடைபாதை உணவகங்களில், இறைச்சி கூடங்களில், மீன் மார்க்கெட்டுகளில் என எங்கெங்கு புகார்கள் வருகின்றனவோ, அங்கெல்லாம் சோதனைகள் நடத்தப்படுகின்றன. கடைகளில் இறைச்சி கெட்டுப்போயிருந்தாலோ அல்லது சுகாதாரமான முறையில் சமைக்கப்படவில்லை என்றாலோ, சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் மீன் மார்க்கெட்களில்தான், இப்படியான குற்றச்சாட்டுகள் அதிகரிக்கின்றன. காரணம், அளவுக்கு அதிகமான மருந்துகளை கலந்து, ஐஸ் பெட்டிகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுவதால், பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. அதனால், மீன்களை எப்போதுமே கவனத்துடன் வாங்க வேண்டும் என்று அதிகாரிகளும் அறிவுறுத்தியபடி உள்ளனர்.
திருவல்லிக்கேணி ஓட்டல்
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பிரபலமான ஓட்டலில் திடீர் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.. திருவல்லிக்கேணியில் நிறைய பிரியாணி கடைகள் இருநத்லும், பிலால் பிரியாணி என்ற உணவகம் புகழ்பெற்ற ஓட்டலாகும்.. அண்ணாசாலையில் மவுண்ட் ரோடில் இயங்கிவரும் இந்த ஓட்டலுக்கென்று ரெகுலர் கஸ்டமர்கள் உள்ளனர்..
அந்தவகையில், ரம்ஜானுக்கு முதல் நாள் அதாவது கடந்த 30ம் தேதி சகோதரிகளான 2 கல்லூரி மாணவிகள் குடும்பத்தினருடன் வந்து இங்கு சாப்பிட்டிருக்கிறார்கள.. சகோதரிகள் 2 பேரும் மட்டன் குழம்பு சாப்பிட்டிருக்கிறார்கள்.
பிறகு சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
20 பேர் அடுத்தடுத்து பாதிப்பு
ஆனால், அதற்கு பிறகுதான் தெரிந்தது, பிலால் பீப் பிரியாணி சாப்பிட்ட 20 பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு தண்டையார்பேட்டை மருத்துவமனையிலும், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர்..
மேலும், திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்ட 20 பேரின் குடும்பத்தினரும் புகார்களை அளிக்க துவங்கினர். கெட்டுப்போன உணவுகள் விற்கப்பட்டதாக அனைத்து புகார்களிலும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, பிலால் உணவகத்தில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர்உடனடியாக சோதனை மேற்கொள்ள சென்றனர்.. ஆனால், அந்த கடை பூட்டப்பட்டிருந்தது..
அதிரடி சோதனைக்கு விரைந்த அதிகாரிகள்
இந்த ஓட்டல் எப்போதுமே மதியம் 1 மணிமுதல் இரவுவரை இயங்கக்கூடியது.. ஆனால், அதிகாரிகள் வருகை குறித்து முன்கூட்டியே அறிந்த ஓட்டலின் உரிமையாளர்கள் ஓட்டல் நுழைவு வாயில்களை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். அந்த கடையின் ஓனரையும் காணவில்லை.. அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகளுடன் இணைந்து ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர்.
கிரிமினல் குற்றம் - பூட்டை தொடக்கூடாது
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ்குமார், "மவுண்ட் ரோட்டில் உள்ள பிலால் கடை குறித்து எங்களுக்கு தகவல் வரவில்லை. சிறிய கடை பெரிய கடை என்றெல்லாம் பார்த்து சோதனை செய்ய மாட்டோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். பொதுமக்களிடமிருந்து இப்போது நேரடியாக புகார்கள் வந்தன..
முறையான சோதனை நடத்தப்படும் வரை மக்கள் ஓட்டலில் சாப்பிட்டு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தற்காலிகமாக பூட்டியுள்ளோம். உரிமையாளர்களை தொடர்புகொள்ள தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.. ஓட்டலில் போடப்பட்டுள்ள பூட்டை எங்களின் அனுமதியின்றி உடைத்தால் கிரிமினல் குற்றம். உரிய விளக்கம் தரும்வரை கடையை திறக்க விடமாட்டோம்'' என்று உறுதி தெரிவித்துள்ளனர்.
-
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications