ரேஷனில் "டபுள் சிக்ஸர்".. இந்திய அஞ்சல் வங்கியுடன் இணைந்து "இ-சேவை மையம்".. அதென்ன "தனி மொபைல் ஆப்"?
சென்னை: ரேஷன் "தனி மொபைல் செயலி"யின் செயல்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.. இதற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

பொங்கல்: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, இன்னொரு தகவலும் வெளியிடப்பட்டது.. "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்" அமலில் உள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது.. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இ-சேவை: இந்நிலையில், இன்னொரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்திய அஞ்சல் வங்கி உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பொதுமக்களின் வசதிக்காக ரேஷன் கடைகளில் விரைவில் ஆதார், பாஸ்போர்ட் சேவை துவங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. பல மாநிலங்களில் ரேஷன் கடைகளுடன் இ-சேவை மையம் செயல்படுவதால் பொதுமக்களுக்கு உதவியாக இருப்பதோடு வருவாய் ஈட்டி வருவதால், தமிழகத்திலும் ரேஷன் கடைகளுடன் இ-சேவை மையங்களை தொடங்க கூட்டுறவு துறை திட்டமிட்டு உள்ளது.
ரேஷன் கடைகளை லாபகரமாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.. எனவே, அடுத்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் இ-சேவை மையமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கு, பாஸ்போர்ட் எடுப்பதற்கான ஆன்லைன் மூலம் சமர்பித்தல், மின்சாரம், குடிநீர், கழிவுநீர், சொத்துவரி, டெலிபோன் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்துதல், ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த மையத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பேமெண்ட்: இத்திட்டத்தை செயல்படுத்த இந்திய அஞ்சல் கட்டண வங்கி, இந்திய தேசிய பேமென்ட் கழகம் மற்றும் தனியார் சேவை வழங்குபவர்களுடன் கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 11 ஆயிரத்து 867 தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில், கிராமப்புறங்களில் 10 ஆயிரத்து 259 செயல்படுகின்றன. இந்த தபால் நிலையங்கள் கிராமங்களில் செயல்படும் சுமார் 26 ஆயிரம் ரேஷன் கடைகளை நிறைவு செய்கின்றன. அவர்களால் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும், என்று அதிகாரி கூறுகிறார்கள்.. எனவே, ரேஷன் கடைகளில் இ-சேவை தொடங்கப்பட்டால், பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை வழங்குதல், திருத்தங்களை செய்து பயன்பாட்டு பில் தொகை செலுத்துதல் மற்றும் ஆதார் தரவை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.
அதேபோல இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. சமீபகாலமாகவே, ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லாமல் இருப்பதுடன் வேறு நபர்கள் வாயிலாக செல்போன் ஆப் மூலமாகவே ஆய்வு விபரங்களை பதிவு செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.. ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்காக கடந்த வருடம் 7 500 கோடி ரூபாய் செலவு செய்தது... இந்த வருடம் 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது..
புது செயலி: ஆனால், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை சில ஊழியர்கள் கள்ளச்சந்தையில் விற்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.. இதற்காக கலெக்டர் முதல் வட்ட வழங்கல் அதிகாரிகள் வரை மாதம்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரேஷன் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் ஆய்வுக்கென்றே இனிமேல், "தனி மொபைல் செயலி", கடந்த 2022 இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை அனைத்து ஆய்வு அதிகாரிகளும் தங்களின் மொபைல் போனில் டவுன்லோடு செய்துள்ளனர்.
செயலியில் பயனாளர் பெயர், பாஸ்வேர்டு போன்றவற்றை பதிவு செய்து அதனுள் செல்ல வேண்டும்.. பிறகு பொருட்கள் இருப்பு, இருப்பு குறைவு, கூடுதல் இருப்பு போன்ற குறிப்புகளை அதில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், வழக்கம்போல் பல அதிகாரிகள் கடைக்கு சரிவர ஆய்வுக்கு செல்வதில்லை என்றும், இதனால்ஆய்வு விபரங்கள் செயலியில் பதியப்படுவதில்லை என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்து உயரதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்துள்ளதாம். இந்த குறையும் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டால், ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது முழுமையாக தடுக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை சொல்கிறார்கள் அதிகாரிகள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications