அடித்து தூக்கும் சென்னை.. பேரிகார்டில் "மூன்றாவது கண்" இருக்காமே? போக்குவரத்தில் புதிய அதிரடி! சபாஷ்
சென்னை: சென்னையில் ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அது என்ன தெரியுமா?
சாலை விதிகளை சரியாக பின்பற்றாதது, சாலைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் இந்தியா முழுவதுமே ஆயிரக்கணக்கான பாதசாரிகள் அநியாயமாக உயிரிழந்து வருகிறார்கள்.. இந்த இறப்பு எண்ணிக்கையானது வருடா வருடம் உயர்ந்தபடியே இருக்கிறது.

வாகன எண்ணிக்கை: அதேபோல, நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகியபடியே உள்ளது.. டிசைன் டிசைனாக வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள், சாலை விதிகளை மதிப்பதிலும், வாகனங்களை சீராக இயக்குவதிலும் முழுமையான கவனத்தை செலுத்துவதில்லை.. இதுவும் விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளதாக சொல்கிறார்கள்.
அதனால்தான், போக்குவரத்து போலீசார்கள் வாகன விதிகளில் கடுமையை கடைப்பிடித்து வருகிறார்கள்.. நம்முடைய தமிழகத்திலும் போக்குவரத்து போலீசார் பல்வேறு விதிமுறைகளை விதித்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டிராபிக் பிரச்னை: அதேபோல, சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துக்களை தடுக்கவும் போக்குவரத்து காவல்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன..
குறிப்பாக, சென்னை பெருநகரில் அண்ணாநகர் ஆர்ச், அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் சிக்னல், பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர் சாலை, தரமணி நெடுஞ்சாலை என 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிக்னல்களில் ஏற்கனவே அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஏஎன்பிஆர் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.. அதேபோல, வாகன ஓட்டிகள் மீது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
தகராறு: இதைத்தவிர, வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்கு ஏஎன்பிஆர் கேமரா பொருத்தப்பட்ட 2 வாகனங்கள் இப்போது நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே ஏற்படும் தகராறுகள் குறைந்திருக்கிறதாம்.
இதுபோலவே இன்னொரு புதிய முயற்சியையும் போக்குவரத்து போலீசார் கொண்டுவர போகிறார்களாம். அதாவது, பேரிகார்டில் சோலார் மூலம் இயங்கும் ஏஎன்பிஆர் கேமராவை பொருத்தி, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்போகிறார்களாம். அதாவது, ஒரு வழி பாதையில் சென்றால் இந்த கேமரா ஈஸியாக, போலீசாரிடம் காட்டி தந்துவிடுமாம்.
சபாஷ்: இப்படி பேரிகார்டில் கேமரா வைத்துவிட்டால், விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் பதிவு எண்களை ஸ்கேன் செய்யப்பட்டுவிடும்.. பிறகு விதிமீறலில் ஈடுபடும் வாகன உரிமையாளருக்கு அபராதம் தொகைக்கான சலான் அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்..
முதற்கட்டமாக 10 பேரிகார்டில் பொருத்தப்பட்ட ஏஎன்பிஆர் கேமராக்களை போக்குவரத்து போலீசார் கொள்முதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, இதுபோன்ற முயற்சிகளால், சாலை விபத்துகள் மேலும் குறையும் என்று நம்பப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications