ஜொலி ஜொலிக்கும் சாதாரண வந்தே பாரத்.. ஏசி இல்லாத 22 பெட்டி.. வந்தே சதரன் ரயில் எப்படி இருக்கு பாருங்க
சென்னை: வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து, வந்தே சதரன் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரப்போகின்றன.. இந்த ரயில்களை அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டனர்.. இதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவை பெற்று வருவதையடுத்து, ரயில்வேயின் அடுத்தடுத்த விரிவாக்கம் நடந்து வருகிறது.. அந்தவகையில், சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.

சாதாரண் வந்தே பாரத்: ஏற்கனவே உள்ள வந்தே பாரத் ரயிலிலேயே ஒருசில மாற்றங்களை செய்து, இந்த ரயில் தயாராகிறது. அந்தவகையில், இந்த ரயிலில் ஏசி வசதி கிடையாது.. சாதாரண பெட்டிகள்தான் இருக்கம்.. 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளை கொண்டது இந்த வந்தே சதரன் ரெயில்கள்.. இவைகளை நாடு முழுவதும் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரிசர்வேஷன்: அதாவது, ரிசர்வேஷன் இல்லாத 8 பெட்டிகள் உள்பட22 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே சதரன் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் சென்னை ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன... பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 என்ஜின்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளன உள்ளன..
இந்நிலையில், ரெயில்வே அதிகாரிகள் இன்று ஐசிஎப் ஆலையில் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டனர்.. அநேகமாக இந்த மாத இறுதிக்குள் வந்தே சதரன் ரெயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் வசதிகள்: இந்த ரயிலிலுள்ள கூடுதல் ஸ்பெஷல் வசதிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.. வந்தே சதரன் ரெயிலில் சுமார் 1800 பயணிகள் பயணிக்க முடியும்.. படுக்கை வசதிகளுடன் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஃபேன்கள், சுவிட்சுகள், பேனல்கள், எல்இடி விளக்குகள் நவீன வடிவில் பொருத்தப்பட்டுள்ளன..
ஒவ்வொரு சீட்டிற்கும் செல்போன் சார்ஜர் வசதி உண்டு.. முக்கியமாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் இருக்கிறதாம்.
கப்ளர்கள்: எல்எச்பி பெட்டிகளுடன் இருபுறமும் மின்சார என்ஜின் கொண்டு இயங்கும். எந்த ஒரு நிலையிலும் ரயிலை பின்னோக்கி இயக்க தேவையில்லை. 2 முனைகளிலும் இன்ஜின்கள் இருக்கும். ஒவ்வொரு ரயில் பெட்டியும் நிரந்தர கப்ளர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், பெட்டிகள் பிரிந்து செல்வதற்கு வாய்ப்பு இருக்காது.. ரயில் நிற்கும்போது ஏற்படும் அதிர்வுகளை பயணிகள் உணர முடியாது.. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்பதால், இந்த ரயிலின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications