சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. ரேஷனில் "மொத்தமா" வாங்கலாம்.. தமிழக அரசு சர்ப்ரைஸ்.. செம குஷி
சென்னை: ஏற்கனவே வெயில், மண்டையை பிளக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், ரேஷன்தாரர்களுக்கு ஜில் அறிவிப்பு ஒன்றினை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. என்ன அது?
தமிழகத்தை பொறுத்தவரை, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.. குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை மாதமாதம் வழங்கப்பட்டு வருகின்றன..

சலுகை: இந்த சலுகை காரணமாக, லட்சக்கணக்னோர் பலன் பெற்று வருகிறார்கள்.. தமிழக அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் தொடர்ந்து காக்கப்பட்டு வருகின்றன.. இதனை தவிர, பண்டிகை காலங்களில் தீபாவளி, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷனில் வழங்கப்படுகின்றன..
அதேபோல, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் பாதிப்படைந்தோருக்கும் நிதி நிவாரண உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.. இதற்கு நடுவில், ரேஷன் கடைகளில் திடீர் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இலவச எண்கள்: பொதுமக்களுக்கு ஏதாவது புகார் இருந்தால், அதை தெரிவிக்க இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.. இது எல்லாவற்றையும்விட, ரேஷன்தாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களையும் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் தமிழகமெங்கும் நடத்தி வருகிறது. இந்த முகாம்கள், ரேஷன்தாரர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு சிறப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது வெயில் காலம் துவங்கிவிட்டதால், கார்டுதாரர்களை தேவையில்லாமல் வெயிலில் அலைக்கழிக்கக்கூடாது என்று ரேஷன் கடைகளுக்கு உத்தரவு பறந்துள்ளது..
சூப்பர் அறிவிப்பு: கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.. ஆனால், சில இடங்களில், ஒரே தவணையில் வினியோகம் செய்யாமல், ஒரு நாளைக்கு அரிசியும், இன்னொரு நாளுக்கு மற்ற பொருட்களும் என ரேஷன் ஊழியர்கள் தருகிறார்களாம்.
ஒரேமுறை எல்லா பொருட்களையும் தராமல், வேறு வேறு நாளில், தங்கள் இஷ்டத்திற்கு வழங்குகிறார்களாம். இதனால், கார்டுதாரர்கள் பலமுறை கடைக்கு வர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
அதிரடி உத்தரவு: வெயில் காலம் துவங்கிவிட்டதால், பொதுமக்களுக்கு இதனால் தேவையில்லாத அலைச்சல் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், ஒரே தவணையில், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
கார்டுதாரர்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும், அதற்கேற்றவாறு, கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்புமாறும் நுகர்பொருள் வாணிப கழகத்திடம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்..
குஷியில் மக்கள்: அதுமட்டுமல்ல, உணவு வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தொடர்ந்து அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டு, ஒரே தவணையில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications