படுக்கை இருக்கைகளுக்கு கட்டண சலுகை? அரசு பஸ்ஸில் வருதா மாற்றம்? கோட்டைக்கு கோரிக்கை - யார்னு பாருங்க
சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு படுக்கை வசதியுடைய இருக்கைகள் சலுகை கட்டணத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் சிவசங்கர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், 500 மின்சார பஸ்கள் உட்பட 2,271 பேருந்துகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில், மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்..

மாற்றுத்திறனாளிகள்: பிறகு, மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகளை ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.
அதேபோல, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்துவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்தள பேருந்துகளை ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
கண்காணிப்புகள்: எனினும், மாநகர பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாகவே வலுத்து வருகிறது.
காரணம், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் நலன் கருதி ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா, எமர்ஜென்சி பட்டன், ஊன்றுகோல் வைப்பதற்கான வளையம் போன்றவை ஸ்பெஷலாக அமைக்கப்பட்டுள்ளன... ஆனால் இவையெல்லாம் முறையாக நடைமுறையில் உள்ளதா? என்று கண்காணிப்பதில்லையாம்..
ஊன்றுகோல்: ஒருசில மாநகர பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல் வைப்பதற்காக இடவசதி உள்ளது என்றாலும், இது படிக்கட்டை ஒட்டி அமைந்திருக்கிறதாம். தடுப்பு எதுவுமே இல்லாததால், பஸ் வேகமாக சென்றாலும், ஊன்றுகோல் தவறி விழுந்துவிடும்..
அல்லது படியில் ஏறுவோருக்கு இடையூறு ஏற்பட்டுவிடும். அதனால், பயணிகள் கால் வைக்கும் இடத்தில் ஏதேனும் தடுப்புகள் இருந்தால், ஊன்றுகோலால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இப்படிப்பட்ட சூழலில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் சிலீப்பர் பேருந்துகளிலும் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவர் வில்சன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: "தமிழக அரசு போக்குவரத் துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் பல்வேறு குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக கடந்த ஆண்டு அக்.3-ம் தேதி தனியாக குறைதீர் கூட்டம் நடத்தி விவாதிக்கப்பட்டது.
எச்சரிக்கை: இதுபோன்ற குறைதீர் கூட்டங்களை 6 மாதத்துக்கு ஒருமுறை தொடர்ந்து நடத்தி, அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவேண்டும். அரசுப் பேருந்துகளில் பயணிக்கும்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை அபகரித்து அமரும் பிற பயணிகளை எச்சரிக்கும் விதத்தில், அதற்கான அபராதத் தொகை ரூ.500 அல்லது ரூ.1,000 என இருக்கையின் மேல்புறத்தில் எழுதி விளம்பரம் செய்ய வேண்டும்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு படுக்கை வசதியுடைய இருக்கைகள் சலுகை கட்டணத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. இணையதள முன்பதிவிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான படுக்கை வசதி காண்பிக்கப்படுவதில்லை. எனவே, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும்.
கோரிக்கை: அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் ஊர்திபடி வழங்கப்படாத அனைத்துமாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கும், உடனடி ஊர்தி படி ரூ.2,500 வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications