வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! இடியை இறக்கிய நெடுஞ்சாலைத்துறை.. தமிழகத்தில் 25 டோல்கேட்களில் கட்டணம் உயருது
சென்னை: விக்கிரவாண்டி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர உள்ளது. வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுங்க கட்டணம் உயர இருப்பதாகவும் வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இந்த தகவல் அமைந்துள்ளது.
நாடு முழுவதும் 1000 -க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களின் தன்மைகேற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

அதாவது, கனரக வாகனம் என்றால் ஒரு கட்டணமும், இலகுரக வாகனத்திற்கும் ஒரு கட்டணம் என வாகனங்களின் அச்சுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளில் காலதாமதம் ஏற்படுவதை குறைக்கும் விதமாக தற்போது பாஸ்ட் டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடி கட்டணத்தை பொறுத்தவரை கட்டணம் ஆண்டுக்கு 2 முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாற்றி அமைக்கப்படுகிறது.
ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட இருந்தது. ஆனால் லோக்சபா தேர்தல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு கடந்த ஜூன் மாதத்தில் சுங்கக் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.
அப்போது தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. 5 சதவீதம் வரை அப்போது கட்டணம் உயர்த்தியிருந்தார்கள். அதாவது ரூ.5 முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்ந்திருந்தது. இந்த நிலையில் தான், தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டணத்தை உயர்த்த உள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 67 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 36 சுங்கச் சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்படது. இதனால் மீதமுள்ள சுங்கசாவடிகளில் வரும் செப்.1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, வாலாஜா, ஸ்ரீபெரும்பதூர் உள்பட 25 சுங்கச் சாவடிகளில், 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி பார்த்தால் வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும்.
இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, "சலுகை ஒப்பந்தத்தின்படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருகிறது. தற்போது தமிழகத்தில் 67 செயல்பாட்டு சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 25 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1 -ந் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.
அந்த வகையில், கட்டண உயர்வு இருக்கும். அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை இந்த கட்டண உயர்வு இருக்கும்" என்று கூறினர். சுங்கச்சாவடிகளின் பயனர் கட்டணம் உயர்த்தப்பட்டதால் வாகனங்களின் வாடகை கட்டணம் உயரும். அதாவது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் சரக்குக் கட்டணமும் அதிகரிக்கும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications