ஓட்டு போட சொந்த ஊர் திரும்பியதால் நேர்ந்த விபரீதம்.. கிணற்றில் சிக்கி தந்தை, மகன் பலி
சென்னை: ஓட்டு போட வந்த கூலித் தொழிலாளி நீச்சல் கற்றுக் கொடுத்தபோது நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற கிணற்றில் குதித்ததால் தந்தையும் மகனும் சேற்றில் சிக்கி பலியாகிவிட்டனர்.
திருப்பத்தூரை அடுத்த கசிநாயக்கன்பட்டி கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (35). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், கீர்த்தனா (10) என்ற பெண் குழந்தை மற்றும் ஜெகதீஷ் (8) என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இவர் சென்னையில் கூலித் தொழில் செய்து வருகிறார் மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வருவது வழக்கம். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

பிளாஸ்டிக் டப்பா
நேற்று காலை வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்திவிட்டு வீடு திரும்பிய பாலாஜி தனது குழந்தை ஜெகதீஷுக்கு நீச்சல் கற்றுத் தர 5 லிட்டர் எண்ணெய் சேமிக்கும் பிளாஸ்டிக் கேனை எடுத்துக் கொண்டு தங்களது விவசாயக் கிணற்றில் சென்று ஜெகதீசனின் இடுப்பில் பிளாஸ்டிக் டப்பாவை கட்டி நீச்சல் பழக கற்றுக் கொடுத்துள்ளார்.

கிணற்றில்
அதன் பின் திடீரென கயிறு அவிழ்ந்து ஜெகதீஷ் கிணற்றுக்குள் சென்றுள்ளான். இதனை சற்றும் எதிர்பாராது கிணற்றின் மேல் அமர்ந்து கொண்டிருந்த பாலாஜி தனது குழந்தை கிணற்றுக்குள் செல்வதைப் பார்த்து குழந்தையை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

சேற்றில் சிக்கினார் தந்தை
குதித்த வேகத்தில் பாலாஜி கிணற்றில் உள்ள சேற்றில் சிக்கி கூக்குரலிட்டுள்ளார். இந்த சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பாலாஜி மற்றும் அவருடைய மகன் ஜெகதீஷ் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தந்தையும் மகனும் பலி
இதன் காரணமாக பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கந்திலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டு போட ஊர் திரும்பிய பாலாஜி மற்றும் அவருடைய குழந்தை இருவரும் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications