தந்தையர் தினம் 2020 : உங்கள் அப்பாவின் பெருமைகளை எங்களுக்கும் சொல்லுங்கள்
சென்னை: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... தந்தையின் அன்பின் முன்னே.. இது பாடல் வரி மட்டும் இல்லை... .நிதர்சனமும் கூட.
அம்மாக்களின் கதைகளை நிறையவே கேட்டிருக்கிறோம். வாழும் சாமிதான் அம்மா.. ஆனால் நாம் நல்லா வாழ வேண்டும் என்பதற்காக அனுதினமும் தன்னை வருத்திக் கொள்ளும் அப்பாக்களையும் நாம் கொண்டாட வேண்டும் இல்லையா.. அதற்காகவே ஆண்டுதோறும் அன்னையர் தினம் போலவே தந்தையர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு ஆண்டு இது தேதி மாறி வருகிறது.. இந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படவுள்ளது. கொரோனா, லாக்டவுன் என உலகமே மாறிப் போய்க் கிடக்கிறது.. ஆனால் என்றும் மாறாத, எப்போதும் மாறாத அன்பு அப்பாக்களின் அன்புதான்.
அப்பா கிட்ட வாங்கிய அடிதான் பலருக்கு நினைவிருக்கும். ஆனால் அந்த அடிகளுக்குப் பின் அப்பாக்கள் நம்மை செம்மைப்படுத்த எடுத்துக் கொண்ட சிரத்தையும், அக்கறையும் கூடவே மறைந்திருப்பது பலர் மறந்து விடுவார்கள். ஆனால் வளர்ந்து பெரிய ஆளான பிறகு அப்பாவைப் பற்றி நினைக்கா, வருந்தாத, நன்றி சொல்லாத பிள்ளைகளே இருக்க முடியாது. அதுதான் அப்பா.
அம்மாக்கள் அன்பு நம்மை நல் வழிப்படுத்துகிறது என்றால்.. அப்பாக்கள் காட்டும் அன்பு நம் வாழ்க்கைப் பாதையை செப்பனிட உதவும். அப்பாக்களுக்குள்ளும் தாய்மை உண்டு.. என்ன, அதைப் புரிந்து கொள்ள நாம் நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டு விடுகிறோம். உங்களுக்கும் உங்களது அப்பா குறித்த நினைவுகள், மகிழ்ச்சிகள், நெகிழ்ச்சிகள் நிறையவே இருக்கும்.. அதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தந்தையை உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள்.. எல்லோரும் சேரந்து அவரை வணங்குவோம், வாழ்த்துவோம்.
கவிதையாக, கட்டுரையாக, நெகிழ்ச்சி உரையாக, வீடியோவாக எப்படி வேண்டுமானாலும் எங்களுக்கு அனுப்பலாம். காத்திருக்கிறோம்.
அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications