கவிஞர் வைரமுத்துவின் 50-ம் ஆண்டு இலக்கியப் பயணம்... சிலாகித்து வீடியோக்கள் வெளியிடும் வாசகர்கள்
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பயணத்தின் 50-ம் ஆண்டு நிறைவடைகிறது. கவிஞர் வைரமுத்துவை சிறப்பிக்கும் வகையில் அவரது எழுத்துகளால் வசீகரிக்கப்பட்டவர்கள் சிலாகித்து பேசும் வீடியோக்கள் VairamuthuIlakkiyam50 என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.

கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுதவந்து 50 ஆண்டுகள் நிறைகின்றன. அவரது முதல் கவிதை நூலான 'வைகறை மேகங்கள்' கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது. அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இராண்டாம் ஆண்டு மாணவர்.
50 ஆண்டுகளில் அவர் 38 நூல்களும் 7500 பாடல்களும் எழுதியிருக்கிறார். வைரமுத்துவின் இலக்கிய பயணத்தின் 50-ம் ஆண்டை குறிப்பிடும் வகையில் சமூக வலைதளங்களில் அவர் சிறப்பிக்கப்பட்டு வருகிறார். வைரமுத்து 50- இலச்சினையை அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
இந்த இலச்சினையுடன் VairamuthuIlakkiyam50 என்ற ஃபேஸ்புக் பக்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நாள்தோறும் வைரமுத்துவின் எழுத்துகள் குறித்த வாசகர்களின் கருத்துகள் வீடியோக்களுடன் பதிவிடப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் இருந்தும் வைரமுத்துவின் வாசகர்களின் வீடியோக்கள் இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படுகின்றன.
மேலும் http://www.vairamuthu.in/vm50 என்ற இணையப் பக்கமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் கவிஞர் வைரமுத்துவின், இரண்டு நூற்றாண்டுகளின் வாழ்வியல் - உளவியல் - உலகியலைப் பாத்திரங்களின் வழியே பதிவு செய்யும் உலகத்தரம் வாய்ந்த 40 சிறுகதைகள் உட்பட ஒவ்வொரு நூல் குறித்த அறிமுகமும் இடம்பெற்றிருக்கிறது.
வைரமுத்துவின் ஐம்பதாண்டு கால இலக்கிய பயணத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியில் சில சிறப்புச் சலுகைகளும் சுவாரசியமான அனுபவங்களும் காத்திருக்கின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 27) மாலை 4 மணிக்கு புத்தக கண்காட்சிக்கு வைரமுத்து வருகை தருகிறார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைத்திருக்கும் பொருநை ஆற்றங்கரை கண்காட்சி அருகில் வாசகர்களுக்கு வைரமுத்து கையெழுத்திட்டு தருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications