சென்னையில் பிளஸ் 2 மாணவியுடன் நெருங்கி பழகிய பெண் கராத்தே பயிற்சியாளர்.. விசாரித்தால் பெரிய ட்விஸ்ட்
சென்னை: சென்னை பெரம்பூரைச் சேர்ந் 12ம் வகுப்பு மாணவியை கடத்திய 27 வயதாகும் கராத்தே பெண் பயிற்சியாளரை தூத்துக்குடியில் கைது செய்தனர். அவர் ஆணாக மாறி மாணவியை திருமணம் செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் எப்படி 12ம் வகுப்பு மாணவியை கண்டுபிடித்தார்கள்.. பெண் கராத்தே பயிற்சியாளரின் திட்டம் என்ன என்பது பற்றி போலீசார் கண்டுபிடித்தது எப்படி என்பதை பார்ப்போம்
சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 16 வயதாகும் சிறுமி, 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு கராத்தே பயிற்சி பெற வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. இதற்காக சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு கராத்தே பயிற்சி வகுப்பில் மாணவி கராத்தே பயிற்சிக்கு சென்றார். அங்கு அவர் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார். மாணவிக்கு 27 வயதான திருமணம் ஆகாத பெண் கராத்தே வீரர் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்.

இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி கராத்தே பயிற்சிக்கு சென்ற மாணவி அதன்பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார்கள். ஆனால் எதுவும் தெரியவில்லை. இதனிடையே கராத்தே பயிற்சி பள்ளியில் படித்தவர்களிடம் விசாரித்த போது தான் கராத்தே பெண் பயிற்சியாளர் , மாணவியிடம் நெருங்கி பழகியதும், திருமணம் செய்வற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெரம்பூர் மாணவியின் தாயார் உடனடியாக திரு.வி.க.நகர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மாணவியின் செல்போன் எண் கடைசியாக எங்கு இருந்தது என்பதை ஆய்வு செய்தனர். அதில் மாணவி, கராத்தே பெண் பயிற்சியாளரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர். பின்னர் பெண் கராத்தே பயிற்சியாளர் மற்றும் மாணவியை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த பெண் கராத்தே பயிற்சியாளர், தன்னிடம் கராத்தே பழக வந்த பிளஸ்-2 மாணவியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இன்னும் சில மாதங்களில் அந்த பெண் கராத்தே பயிற்சியாளர் வடமாநிலம் சென்று ஆணாக மாற திட்டமிட்டு இருந்தாராம்,. அதன்பிறகு மாணவியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தாராம்.
இதை விசாரணையில் அறிந்த போலீசார், 12ம் வகுப்பு மாணவிக்கு போலீசார் அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு குறித்து போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய போலீசார், பெண் கராத்தே பயிற்சியாளர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை திருவிக நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications