டிராவிட்டை உள்ளே கொண்டு வந்து.. "மென்டர்" தோனியை வைத்து பெரிய பிளான் போடும் பிசிசிஐ.. கசிந்த தகவல்?
சென்னை; இந்திய அணியில் வரும் நாட்களில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2021 தொடருக்கு பின்பும் அதன்பின் உலகக் கோப்பை டி 20 தொடருக்கு பின்பும் பல முக்கிய மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய டி 20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகி இருக்கிறார். ஆனால் உடனே பதவியை ராஜினாமா செய்யாமல் டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதான் கேப்டனாக அவர் பங்கேற்கும் கடைசி டி 20 தொடர்.
இன்னொரு பக்கம் ஐபிஎல் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோலி விலகி இருக்கிறார். இன்னொரு பக்கம் டி 20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பதவி விலக உள்ளார்.

ரவி சாஸ்திரி
இந்திய அணியில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி பதவி விலகும் நிலையில், பெரும்பாலும் கும்ப்ளேதான் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வருகின்றன. முன்பு பயிற்சியாளராக இருந்து, கோலியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பதவியை ராஜினாமா செய்தவர் கும்ப்ளே. இப்போது மீண்டும் அவருக்கு பயிற்சியாளர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால் என்ன சிக்கல்
ஆனால் அதே சமயம் பிசிசிஐ அமைப்பில் ஒரு சிலர் கும்ப்ளே பயிற்சியாளர் ஆவதை விரும்பவில்லை என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கும்ப்ளே பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். அவரின் அணித்தேர்வு சரியாக இல்லை. அவரின் ஆட்டம் தொடர்பான திட்டங்கள் சரியாக இல்லை. முக்கியமாக அவரின் பயிற்சிக்கு கீழ் பஞ்சாப் அணி ஜெயிக்க வேண்டிய போட்டிகளில் கூட தோல்வி அடைகிறது.
Recommended Video

வேண்டாம்
அப்படி இருக்கும் போது கும்ப்ளேவை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிப்பது சரியாக இருக்காது என்று பிசிசிஐ தரப்பில் ஒரு பிரிவினர் எதிர்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ அமைப்பில் பலரும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் மூத்த தலைகள் சிலரும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டிராவிட்
டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனாலும் இவரை பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் குரல்கள் எழுந்துள்ளன. பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டால் அதை ராகுல் ஏற்றுக்கொள்வார் என்றே தகவல்கள் வருகின்றன. முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் உள்ளிட்ட பலர் டிராவிட்தான் பயிற்சியாளராக வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.

தோனி
எம்எஸ்கே பிரசாத் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, டிராவிட்டை பயிற்சியாளராக்க வேண்டும். தோனியை நிரந்தரமாக ஆலோசகராக நியமிக்க வேண்டும். இரண்டு பேரும் இந்த பணிகளை மேற்கொண்டால் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று கூறப்படுகிறது. இப்போது ஐபிஎல் போட்டிகளுக்கு இடையில் ஏற்கனவே தோனி தனது மென்டர் பணிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டார்.

மென்டர்
ஏற்கனவே பிசிசிஐ அதிகாரிகள் சிஎஸ்கே ஹோட்டலுக்கு வந்து தோனியுடன் ஆலோசனைகளை செய்து வருகிறார்கள். ஐபிஎல்லில் சிஎஸ்கே தங்கும் அதே ஹோட்டலில்தான் இந்திய டி 20 அணி அடுத்த மாதம் தங்க உள்ளது. இதனால் இப்போதே தோனி ஐபிஎல்லுக்கு இடையில் மென்டர் பணிகளை தொடங்கிவிட்டார். இந்திய அணியின் நிரந்தர மென்டர் ஆகும்பட்சத்தில் தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications