சென்னையில் அரசு அலுவலகங்கள் செல்பவரா நீங்கள்? இடம் மாறும் ஆபீஸ்கள்.. ரொம்ப முக்கியம்.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலகங்கள் செல்பவரா நீங்கள்? சென்னையில் உள்ள சில அரசு அலுவலகங்களின் இருப்பிடம் அடுத்த சில காலங்களுக்கு வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தின் சுரங்கப்பாதை துளையிடும் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியதை அடுத்து சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களின் இடங்கள் மாற்றப்பட உள்ளன.

உதாரணமாக மெட்ரோ பணிகள் காரணமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டிபி ஸ்கீம் சாலையில் உள்ள சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடத்தில் பல விரிசல் ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிப்ரவரி மாதம் சமர்ப்பித்த அறிக்கையில், கட்டிடத்தின் 'செட்டில்மென்ட்' வீக்காக உள்ளது. முக்கியமாக CMRL சுரங்கப்பாதை போரிங் செயல்பாடுகள் காரணமாக செட்டில்மென்ட் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
பல்வேறு அரசு கட்டிடத்தின் வயதைக் கருத்தில் கொண்டு கட்டிடத்தை சீரமைக்க இந்த நேரம் உகந்ததாக இருக்காது என்று அறிக்கை கூறியுள்ளது. அஸ்திவாரத்தின் அடியில் உள்ள மணல் படுக்கையின் காரணமாக பல இடங்களில் மெட்ரோ பணிகள் காரணமாக அரசு அலுவலகங்கள் சில ஆடும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால் அரசு அலுவலகங்களில் கிராக் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதன் காரணமாக சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சில அரசு அலுவலகங்களின் இருப்பிடம் மாற்றப்பட உள்ளது.
மெட்ரோ பணிகள்; ஏற்கனவே சென்னையில் மின்சார ரயில் நிலையங்களுக்கு கீழே மெட்ரோ போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் சில மின்சார ரயில்கள் குறைந்த வேகத்தில் இயங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி கீழ்ப்பாக்கம் மற்றும் செட்மெட் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே சென்னை மெட்ரோவிற்கான நிலத்தடி சுரங்கப்பாதை அமைக்கும் பணி சேட்பேட்டை புறநகர் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது, அங்கு சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் (டிபிஎம்) அடியில் துளையிடுவதால் ரயில்கள் மெதுவாகச் செல்கின்றன.
டன்னல் போரிங் மெஷின் தண்டவாளத்திற்கு அடியில் தோண்டும் பணிகளை செய்வதால், எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications