மெட்ராஸிலேயே கனல் கண்ணன் இருக்க முடியாது.. பெரியாரை பேசுற அளவுக்கு துணிச்சலா.. எகிறிய வேலுபிரபாகரன்
பிரபல டைரக்டர் வேலுபிரபாகரன், கனல் கண்ணனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: மெட்ராஸில் இனி நீ எங்குமே வேலை செய்ய முடியாது... மன்னிப்பு கேளு.. பெரியாரை பேசுகிற அளவிற்கு உனக்கு துணிச்சல் வந்துடுச்சா? உனக்கு கொடுக்கிற சுண்டல் மற்றவர்களுக்கு பயம் வர வேண்டும்" என்று கனல் கண்ணனுக்கு, பிரபல டைரக்டர் வேலுபிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் கடவுள் இல்லை என்று சொல்பவரின் சிலை இருக்கிறது, அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று, கனல் கண்ணன் இந்து முன்னணி கூட்டத்தில பேசியிருந்தார்.
அவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர்மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.. ஆனால், அவர் தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் பணியும் தீவிரமாகி உள்ளது..

ராம ரவிக்குமார்
எனினும், கனல் கண்ணன் எந்நேரமும் கைதாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மற்றொருபுறம், கனல் கண்ணனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் ஆதரவு தந்து வருகின்றனர்.. கனல் கண்ணன் பேசியது அவரது பேச்சுரிமை என்றும் சொல்லி வருகின்றனர்... இதனிடையே, சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், பெரியார் குறித்து தான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று கனல் கண்ணன் கேள்வி எழுப்பியிருந்தார்.

வேலு பிரபாகரன்
இவ்வாறு கனல் கண்ணன் பேசியது, திராவிட கட்சிகளிடையே கொந்தளிப்பை அதிகப்படுத்தி வருகிறது.. கனல் கண்ணனை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.. கனல் கண்ணன் ஒரு மனநோயாளி என்று, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். அந்த வகையில், கனல் கண்ணனுக்கு பிரபல திரைப்பட டைரக்டர் வேலு பிரபாகரனும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசி அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் உள்ளதாவது:

ஃபைட் மாஸ்டர்
"ஃபைட் மாஸ்டர் கனல் கண்ணன்.. டேய் நீ என்னடா யார்ரா நீ? பெரியாரை அவமதிக்கும் அளவுக்கு பெரிய ஆளா? சினிமாவில் நீ வேலை செஞ்சுகிட்டு இருக்க, ஏமாற்றி புரொடியூசரை கவிழ்த்தோமா, புரொடியூசர் பொண்டாட்டி தாலியை அறுத்தோமா, பொண்டாட்டி புள்ளைகளை வாழ வைத்தோமா என்று இருப்பதை விட்டு அதிகப்படியான பேச்சு உனக்கு எதுக்கு?

மெட்ராஸ்
ஏற்கனவே நீ ஒரு கோவில் கட்டி சுற்றுவட்டாரத்தில் இருக்கிற பாமர ஜனங்களை ஏமாற்றி வசூல் பண்ணிக்கிட்டு இருக்கே... நீ இந்த மக்களுக்காக உழைத்த பெரியாரை விமர்சிப்பதற்கு யார் தைரியம் கொடுத்தது? மரியாதையாக மன்னிப்பு கேளு.. ஃபைட் மாஸ்டர் யூனியனில் இருந்து உன்னை அவர்கள் தூக்க வேண்டும், இல்லாவிட்டால், போராட்டம் வெடிக்கும்.. மெட்ராஸில் இனி நீ எங்குமே வேலை செய்ய முடியாது... மன்னிப்பு கேளு.. பெரியாரை பேசுகிற அளவிற்கு உனக்கு துணிச்சல் வந்துடுச்சா? உனக்கு கொடுக்கிற சுண்டல் மற்றவர்களுக்கு பயம் வர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications