ஒரு வழியாக ரகசியத்தை கண்டுபிடிச்சாச்சு.. ரயில் பயணங்களில் இந்த சத்தம் எப்படி வருது தெரியுமா?
சென்னை: தாலாட்டும் காற்றே வா, தொலைதூர நிலவே என்று என்று ரயில் சப்தங்களுக்கு நடுவே செல்லும் பலருக்கு ரயிலில் எங்கிருந்து தடக் , தடக் என்று சப்தம் வருகிறது என்பது தெரியாமல் இருக்கும்.. இந்த வீடியோவை பார்த்தால் ரயில் செல்லும் போது எந்த சத்தம் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிய முடியும்.
ரயில் பயணம் என்பது பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ரயிலில் பயணம் செய்ய விரும்ப காரணம் கழிவறை வசதி, உடல் வலி இருக்காது. வீட்டில் இருப்பது போன்ற உணர்வு, கட்டணம் குறைவு போன்றவற்றை காரணமாக சொல்லலாம். வயதானவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் தொலைதூர பயணம் செய்ய ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறார்கள்.

ரயிலில் டிக்கெட் கிடைப்பது இல்லை என்பது ஒரு குறை என்றாலும், ரயில் பயணிக்க டிக்கெட் கிடைத்துவிட்டால் பலர் குழந்தை போல் மகிழ்ச்சியுடன் பயணிக்கிறார்கள்.இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச் பெட்டிகளை , ஏசி மூன்றாம் வகுப்பு,,இரண்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் சென்றால் வேறலெவலில் அனுபவம் இருக்காது. சொகுசு பெட்டிகளில் பயணிப்பவர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக ரயிலில் செல்ல முடியும்.
ரயில் பயணிப்போருக்கு எந்த பெட்டியில் சென்றாலும், அடிக்கடி தடக் , தடக், தடக் தடக் என்று ஒரு சத்தம் வருவதை பார்த்திருப்பார்கள்.. இந்த சத்தம் எப்படி வருகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ரயிலில் என்ஜினுடன் பயணிக்கும் போது, சக்கரங்கள் தண்டவாளத்தில் உரசுவதால் இப்படி சத்தம் வருகிறது. வளைவான பகுதியில் செல்லும் போது இரயில் சக்கரம் மற்றும் தண்டவாளங்கள் இடையே உராய்வு அதிகமாக ஏற்படுகிறது.. இதனால் சத்தம் வருகிறது என்கிறார்கள் என்ஜினியர்கள். சரி இடைவெளி ஏன் வழங்கப்படுகிறது. சத்தத்திற்கும் இடைவெளிக்கும் தொடர்பு உள்ளதா என்றால், நிச்சயம் உள்ளது என்கிறார்கள் என்ஜினியர்கள்.
கடும் வெப்பமான நாட்களில் விரிவடைவதற்காக தண்டவாளங்களுக்கு இடையில் சிறிய இடைவெளி வழங்கப்படுகிறது. எந்த பிரச்சைனையும் இன்றி ரயில்கள் மென்மையாக செல்ல இந்த இடைவெளி அவசியம் என்று சொல்கிறார்கள்.
Finally, the secret is revealed...
— Mr.Balu™ (@TheBaluu) May 20, 2024
Train journeys are incomplete without this repetitive sound.#Railways #IndianRailways pic.twitter.com/G8TDAkl32q
இன்னும் இதை தெளிவாக செல்ல வேண்டும் என்றால், தண்டவாளங்கள் வெயிலில் நீளும், குளிரில் சுருங்கும் தன்மை உடையவை ஆகும். எனவே நீளும்போது தண்டவாளம் வளையக்கூடும். அதனால் அடுத்தடுத்து பதிக்கப்படும் இரு தண்டவாளங்களிடையே அரை அங்குலம் போல இடைவெளி விடப்படும். சக்கரங்கள் அந்த இடைவெளியைக் கடக்கும்போது சத்தம் உண்டாகும். இவ்வாறு 30-40 அடிகளுக்கொருமுறை இடைவெளி இருப்பதால் தொடர்வண்டி சத்தமிட்டுக்கொண்டே செல்லும். இதுதான் அந்த ரகசியம் ஆகும். இதுபற்றி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சத்தம் எப்படி வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications