Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் ரொம்ப முக்கியம்! கல்வித்துறைக்கு கொட்டிக்கொடுத்த பிடிஆர்.. கடந்த முறையை விட அதிகம்.. சிறப்பு

புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளின் அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது

2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அவர் 3வது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும் இது. பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் பட்ஜெட்டில் வெளியிட்டு வருகிறார்,

பட்ஜெட்

பட்ஜெட்

அவர் தனது அறிவிப்பில், நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ₹200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ₹80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

கல்வித்துறை

கல்வித்துறை

குடிமை நடப்பாண்டை போலவே அடுத்த ஆண்டும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படும். பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளி கல்வித்துறையின் கீழ் அனைத்து துறை பள்ளிகளும் கொண்டு வரப்படும். அறநிலையத்துறை கீழ் செயல்படும் பள்ளிகள் கல்வித்துறைக்கு கீழ் கொண்டு வரப்படும்.

மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை

புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்., 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரூ. 1,500 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மேம்பாட்டுக்கு ரூ40 கோடி செலவு செய்யப்படும். ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

திறன்

திறன்

வரும் நிதி ஆண்டிலிருந்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும். காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக 1547 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது 500 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்படும். காலை உணவு திட்டம் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர். 2.2 லட்சம் மாணவிகளுக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொழிற்பயிற்சி திட்டத்துக்கு ரூ.50கோடி. மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒதுக்கீடு

ஒதுக்கீடு

ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த முறை பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளின் அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+