நவீன செயற்கைகோள் உதவியுடன் நீர் ஆதாரங்களை கண்டுபிடியுங்கள்.. தமிழக அரசுக்கு நிபுணர்கள் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாக குறைந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்
தமிழகத்திலுள்ள பெரும்பாலான நீர் நிலைகள் முற்றிலும் வறண்ட நிலையில், மக்கள் குடிப்பதற்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் கூட நீரின்றி தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் சென்னை தரமணியில் உள்ள மத்திய நிலத்தடி நீர் ஆய்வுத்துறை சார்பில் கடந்த மாதத்திற்கான நிலத்தடி நீர்மட்டம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டமானது, 15 அடி வரை குறைந்துள்ளது.
இதற்கு அடுத்ததாக திருவண்ணாமலை மாவட்டத்தில், நிலத்தடி நீர்மட்டமானது 14 அடியும், வேலூர் மாவட்டத்தில் 12 அடியும் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்துள்ளதாக, நிலத்தடி நீர்வளத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் தெரிவித்த நீர்வள நிபுணரான உமாபதி, பருவமழை பொய்த்ததே இந்த வருடம் மிக கடுமையான வறட்சி ஏற்பட காரணம். இந்த நிலை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியாக வந்து கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் நிலையை போக்க அரசுடன் இணைந்து மக்களாகிய நாமும் செயல்பட வேண்டும். அரசு வழிகாட்டுதலின் படி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழுப்புரம், சிவகங்கை, கரூர், அரியலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. அதே போல சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. 400 அடிக்கும் மேல் ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும், தண்ணீர் கிடைக்காத நிலையே உள்ளது.
எனவே நவீன செயற்கைகோள் உதவியுடன் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், வேறு புதிய நீர் ஆதாரங்களை கண்டறிய நீர்வள நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்த இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து, மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை சீரமைத்து வழங்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
தற்போதைய வறட்சிக்கு மழை நீர் சேகரிப்பு, நீர் செறிவூட்டல் உள்ளிட்ட திட்டங்களில் உரிய கவனம் செலுத்தாததே காரணம் எனவும் நீர்வள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பருவமழை பொய்த்தது வறட்சிக்கு ஒரு காரணம் என்றாலும், மழை நீர் சேகரிப்பு மற்றும் செயற்கை நீர் சேகரிப்பு முறைகளை பின்பற்றாததால் தான் தற்போது வறட்சியில் சிக்கியுள்ளோம். இந்த நிலையை ஒரே நாளில் மாற்ற முடியாது.
கிட்டத்தட்ட 25 முதல் 30 ஆண்டுகளில் சந்திக்காத கொடும் வறட்சியை, தற்போது தமிழகம் சந்தித்துள்ளது. இனிவரும் காலங்களிலாவது அரசு - நிர்வாகம் - மக்கள் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை முறையாக பின்பற்றினால் தான் இப்பிரச்சனைகளில் இருந்து மீள முடியும் என்றும் நீர்வள நிபுணர்கள் கூறியுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications