சென்னை எல்ஐசி 15வது மாடியில் பற்றி எரிந்த பெயர் பலகை.. தீ அணைக்க உதவிய ஏரியல் வெய்கிள்! அப்படினா?
சென்னை: சென்னை அண்ணா சாலையில் வானளவு உயர்ந்த 15 மாடி கொண்ட எல்ஐசி கட்டடம் உள்ளது. இந்நிலையில் பதான் இன்று மாலை திடீரென்று எல்ஐசி கட்டத்தின் மேல் மாடியில் பெயர் பலகை தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பிளாட்பார்ம் ஏரியல் வாகனத்தை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை அண்ணாசாலையின் பழம்பெருமை வாய்ந்த எல்ஐசி கட்டடம் உள்ளது. சென்னையின் அடையாளமாக உள்ள கட்டடம் 15 மாடிகளை கொண்டது. இந்த கட்டடம் தான் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தெற்கு தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை நகரில் இன்றும் கூட அண்ணாசாலையின் அடையாளமாக இந்த எல்ஐசி கட்டம் நிமிர்ந்து நிற்கிறது. இந்த கட்டத்தின் மேல்புறம் எல்ஐசி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

15வது மாடியில் பற்றி எரிந்த தீ
இந்நிலையில் தான் இன்று மாலை திடீரென்று மேல்மாடியில் வைக்கப்பட்டு இருந்த எல்ஐசி பெயர் பலகை தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் நவீன தீயணைப்பு வாகனங்களுடன் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அடுத்தடுத்த தளங்களுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு போராடி தீயை அணைத்தனர். வால்வோ ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் மூலம் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சரியான காரணம் தெரியவில்லை.

ஏரியல் பிளாட்பார்ம் வாகனம்
இந்நிலையில் தான் எல்ஐசி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினருக்கு வால்வோ ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் வேகமாக கைக்கொடுத்தது. அதாவது சாதாரண கட்டங்களில் தீவிபத்து ஏற்பட்டால் அதனை சாதாரண தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்து விடலாம். ஆனால் பெரிய பெரிய உயரமான கட்டடங்களில் தீவிப்து ஏற்பட்டால் அதனை அணைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. மிகுந்த சவால் மிக்கது.

நீளமான ஏணியுடன்..
துரிதமாக சரியான திட்டமிடலும் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பெரிய பெரிய கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைக்க முடியும். இதற்கு பெரும்பாலும் தீயணைப்பு வீரர்களுக்கு ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் தான் கைக்கொடுக்கும். இந்த ஏரியல் பிளாட்பார்ம் வாகனத்தை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். அதாவது தீயணைப்புக்கு தேவையான கருவிகளுடன் நீளமான ஏணியை இந்த வாகனம் கொண்டிருக்கும்.

2 முதல் 3 வீரர்கள் செல்லலாம்
இந்த ஏணியின் ஒருபுறம் வாகனத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் நிலையில் மற்றொரு முனையில் தீஅணைப்புக்கான பொருட்களும், 2 முதல் 3 தீயணைப்பு வீரர்கள் நிற்கும் வகையில் பிளாட்பார்ம் போன்ற அமைப்பு இருக்கும். உயரமான கட்டங்களில் தீவிபத்து ஏற்பட்டால் இந்த வாகனத்தின் ஏணியை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீவிபத்து ஏற்பட்ட தளத்துக்கு செல்ல முடியும். அதோடு தீதடுப்பு உபகரணங்களை பயன்படுத்தி உடனே தீயை அணைப்பார்கள். இந்த வாகனம் தான் தற்போது சென்னை எல்ஐசி கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க பெரிதும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
எல்ஐசி 3 பென்ஷன் திட்டங்கள்! முதியோர்களுக்கு எந்தத் திட்டம் பெஸ்ட்? முழு விவரம் இதோ -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications