Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மர்ம போன்".. முதல்ல ஆறுமுகசாமியை விசாரியுங்க.. திமுக பயந்துட்டாங்க.. எகிறியடிக்கும் தேனி கண்ணன்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து தேனி கண்ணன் நமக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேவையில்லாமல் குழப்பம் செய்து கொண்டிருக்கும், ஆறுமுகசாமியை விசாரிக்க வேண்டும், இது தொடர்பாக ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று சசிகலா ஆதரவாளர் தேனி கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், இழுபறியாக விசாரணை நீடித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்குள் அதிமுக ஆட்சியும் முடிந்துவிட, திமுக அரியணை ஏறியது..

முரண்கள்

முரண்கள்

இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை, ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

பலிகடா

பலிகடா

இதையடுத்து, சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையானது அரசியல் களத்தில் கிளப்பி விட்டு வருகிறது.. அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ், உட்பட எடப்பாடி பழனிசாமி என யார் பெயரும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லையே ஏன்? என்றும், அதிகாரம் இல்லாதவர்களின் பெயர்கள் அதில் இணைக்கப்பட்டு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்..

 தேனி கண்ணன்

தேனி கண்ணன்

இந்நிலையில், சசிகலா ஆதரவாளர் தேனி கண்ணன் ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் சசிகலா மீதான இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளார்.. அத்துடன் சில சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார்.. தேனி கண்ணன் நமக்கு அளித்த பேட்டி இதுதான்: "யூகத்தின் அடிப்படையில் ஆணைய அறிக்கையில், சின்னம்மாவை மென்ஷன் செய்கிறார்கள்.. சின்னம்மா என்ன டாக்டரா? இதெல்லாம் மருத்துவர்கள் பதில் சொல்லக்கூடிய விஷயம்.. எப்படி மருத்துவம் செய்தார்கள்? அதில் என்ன குளறுபடி? எதனால் அம்மாவுக்கு மருத்துவம் செட் ஆகவில்லை என்று டாக்டர்களைதானே விசாரிக்க வேண்டும்?

 ஒப்பாரி + ஒப்பாரி

ஒப்பாரி + ஒப்பாரி

ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையும் வேண்டாம் என்று சொல்லி, விசாரிக்க வேண்டாம் என்று அவர்களையும் ரிஜக்ட் செய்துவிட்டீர்கள்.. அப்படி என்றால் அப்பல்லோவின் 14 டாக்டர்கள் குழுவைத்தானே விசாரிக்க வேண்டும்? ஆறுமுகசாமி ஆணையம் என்பது திமுகவின் குரலாக ஒலிக்கிறது.. திமுக அரசு பற்றி மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. அவங்க கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.. அவங்க நிர்வாகத்தில் குழப்பம் ஓடிக் கொண்டிருக்கிறது.. அவர்களின் பொதுக்குழுவில் முதல்வர் ஒப்பாரி வைத்ததை எல்லாருமே பார்த்தோம்..

 மனக்கசப்பு

மனக்கசப்பு

அப்படி என்றால், ஸ்டாலினுக்கு நிர்வாகத்திறமை இல்லையா? என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. இதை மறைப்பதற்காக, அம்மாவின் மரணத்தில் மர்மம் என்று சொல்லி, அதற்கு சசிகலாவை டார்கெட் செய்து, இவங்களே ஆணையத்தை சொல்ல வைத்திருப்பது போலவே நாங்கள் கருதுகிறோம்.. சம்பந்தமில்லாததை எல்லாம் இந்த ஆணையம் சொல்கிறது.. சின்னம்மாவுக்கும், அம்மாவுக்கும் மனக்கசப்பு இருந்தது, அவர்களின் பழக்கவழக்கத்தில் வேறுபாடு இருந்தது என்றெல்லாம் சொல்கிறது.. இதையெல்லாம் யார் கேட்டாஙக? இதை ஏன் ஆணையம் சொல்லணும்? தேவையில்லாத விஷயங்களை உள்ளே கொண்டு வருகிறார்கள்..

நயவஞ்சகம்

நயவஞ்சகம்

தமிழக அரசு எங்களை விசாரித்து கொள்ளட்டும், எங்களுக்கு கவலை இல்லை.. அம்மாவின் உடம்பில் பிரச்சனைகள் இருந்தது.. அவர்களுக்கு மருத்துவம் செட் ஆகவில்லை.. அமெரிக்கா, லண்டன், எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் அருகில் இருந்தும், சிகிச்சை தந்தும், அது முடியாமல் போய்விட்டது.. அன்றைக்கும் இதே திமுகதான் பிரச்சனையை கிளப்பியது.. அதற்காகத்தான் ஓபிஎஸ், விசாரணை ஆணையத்தை நியமித்தார்.. திமுகவே இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள்.. தன்மீது பழிசொல்லியே பழக்கப்பட்டது திமுக என்றும், விசாரணைக்கு ரெடி என்றும் சின்னம்மா சொல்லி விட்டார்கள்.. அம்மாவின் இறப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று திமுகவுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்..

 ஓவர் லேட்

ஓவர் லேட்

ஆஞ்சியோ செய்வதற்கு சசிகலாதான் தாமதப்படுத்தினாராம்.. இதுவும் யூகம்தான்.. வீட்டில் இருந்தவரை, முதல்வரை பாதுகாக்கும் பொறுப்பு சசிகலாவுக்கு இருந்தது.. ஆனால், மருத்துவமனைக்கு சென்றுவிட்டபிறகு, அந்த மருத்துவமனை அரசு கட்டுப்பாட்டிற்கும், அதிகாரிகள், மருத்துவர்கள் கட்டுப்பாட்டிற்கும் சென்றுவிட்டது.. சிகிச்சை செய்யும் டாக்டர்களை தடுக்க வேண்டிய அவசியம் சசிகலாவுக்கு ஏன் வந்தது? இப்படியெல்லாம் சசிகலா மீது குற்றச்சாட்டை கொண்டுவந்தால், மக்கள் அவரை வெறுத்துவிடுவார்கள் என்று திமுக நினைக்கிறது.. மக்கள் உண்மையை புரிந்துகொண்டார்கள்..

மர்ம முடிச்சு

மர்ம முடிச்சு

முதலில் ஆறுமுகசாமியை விசாரிக்க வேண்டும்.. அவருடைய போன் உரையாடலை விசாரிக்க வேண்டும்.. அவர் இந்த விசாரணையின்போது யார் யாரையெல்லாம் சென்று சந்தித்தார், யாரிடம் எல்லாம் இது தொடர்பாக பேசியிருக்கிறார், அதையும் விசாரிக்க வேண்டும்... அது எங்களுக்கு மர்மமாகவே உள்ளது.. என்னவெல்லாம் சொத்து வாங்கியிருக்கிறார்? என்பதை ஆராய வேண்டும்.. அதனால் விசாரணை கமிஷன் ஒன்றை ஆறுமுகசாமி மீது வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வைக்கிறோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+