முதன்முறையாக "சம்பவம்" செய்த ஆளுநர்.. "இப்ப எதுக்கு சாவர்க்கர்?" அப்பாவு கிட்ட சீறியது யார் தெரியுமா
சென்னை: சென்னை: "தமிழக ஆளுநர் ரவி அவையில் இருக்கும்போதே சாவர்க்கர், கோட்சேவின் பெயர்களை சபாநாயகர் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?" என்று பாஜகவின் வானதி சீனிவாசன் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழக ஆளுநர் ரவி, இன்றைய தினம் சட்டசபையில் பாதியிலேயே அவையை விட்டு வெளியேறியதால், இந்த முறையும் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று அவை துவங்கியதுமே ஆளுநர் பேச ஆரம்பித்தார்.. "மதிப்புக்குரிய சட்டமன்ற தலைவர் அவர்களே, மதிப்புக்குரிய முதலமைச்சர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களே, சட்ட பேரவை அலுவலர்களே, ஊடக நண்பர்களே, தமிழக சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்" என்று தமிழில் ஆரம்பித்து, ஒரு திருக்குறளை வாசித்துவிட்டு, மேலும் சில கருத்துக்களை பேச தொடங்கினார்.
தேசிய கீதம்: அப்போது, 'இந்த அவையில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும். அதை கடைபிடிக்கவில்லை. கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் ஏற்புடையதாக இல்லை. அதனால், உரையை படிக்க விரும்பவில்லை அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியவில்லை" என்றார் ஆளுநர்.
பிறகு, அரசின் உரையை வாசிக்காமல் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் நன்றி என்று சொல்லி வெறும் 4 நிமிடங்களுக்குள் தன்னுடைய உரையை முடித்தார். அரசின் உரையை கவர்னர் முழுமையாக படிக்காமல் புறக்கணித்து அவையில் அமர்ந்த இந்த சம்பவம் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தமிழக அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல், கவர்னர் புறக்கணித்து அவையில் அமர்ந்திருந்தது, தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்கிறார்கள்.
அதிர்ச்சி: இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை தந்து வரும்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.. ஆனால், பாஜகவோ, ஆளுநருக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்து, பாஜகவின் மூத்த தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்..
பொய் பொய்: அதற்கு வானதி, "ஆளுநர் உரையில், பொய் பொய்யா தமிழக அரசு எழுதி வெச்சிருக்கு.. மழை, வெள்ளத்தை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக சமாளித்ததாக பொய் சொல்றாங்க... ஜிஎஸ்டி வரி இழப்பீடு வேண்டும் என்றாலோ அல்லது மெட்ரோ வேலைகளுக்கான நிதி வேண்டும் என்றாலோ, இதையெல்லாம் கேட்பதற்கு பல தளங்கள் இருக்கின்றன...
அதையெல்லாம் விட்டுவிட்டு, ஆளுநர் உரையில் அதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? எல்லாத்துக்கும் மேலாக, ஆளுநர் இருக்கும்போது சாவர்க்கர், கோட்சேவை சபாநாயகர் ஏன் சொல்றாரா, அவங்க பெயரை இங்கு எதுக்காக சொல்லணும்? வரையறையை மீறி சபாநாயகர் நடந்து கொண்டிருக்கிறார்.
தேசிய கீதம்: தேசிய கீதத்தை சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக இசைப்பதில் என்ன பிரச்சினை? அது நம்ம நாட்டின் தேசிய கீதம் தானே? அதை இசைப்பதில் தமிழக அரசுக்கு என்ன கஷ்டம்? தேசிய கீதத்தை ஏன் இப்படி அவமதிக்கிறீங்க?" என்று புட்டு புட்டு வைத்து கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications