"ஃபுல் பவர்" தந்த ஸ்டாலின்.. முதல்வருடன் இணைந்த டிஜிபி.. முதல்முறையாக "காவல் உதவி".. என்னன்னு பாருங்க
காவல் உதவி ஆப் குறித்து டிஜிபி வீடியோ மூலம் விளக்கி உள்ளார்
சென்னை: "காவல் உதவி" என்ற ஆப்பை அனைவரும் உடனே டவுன்லோடு செய்து பயன்பெறுமாறு டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video

காவல்துறை என்றாலே தண்டனையை பெற்று தரும் துறை என்ற பரவலான கருத்து பரவியிருந்த காலம் ஒன்று உண்டு.. அதனால்தான் போலீஸை கண்டதும் பயந்து நடுங்கியிருக்கிறார்கள் அன்றைய பொதுமக்கள்.
காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்தை இழைய விட்டபிறகுதான், பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இணக்கமான போக்கு ஏற்பட ஆரம்பித்தது..

தொழில்நுட்பம்
அதற்கு பிறகுதான், போலீஸ் என்பது தண்டனையை பெற்று தரும் துறை மட்டுமேயில்லை, குற்றங்களை தடுக்கும் துறையாகவும், பாதுகாப்பு நல்கும் துறையாகவும் விளங்கி வருவதை மக்கள் மெல்ல உணர்ந்து கொண்டனர்.. இதற்காகவே, தமிழக அரசும் அவ்வப்போது, மக்களின் பாதுகாப்புக்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், அதையொட்டிய ஆப்களையும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டு வருகிறது..

ஸ்பெஷாலிட்டி
அந்த வகையில் தற்போது அறிமுகமாகி உள்ளது "காவல் உதவி" செயலி ஆகும்.. இந்திய காவல்துறையில் முதன்மையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது... இந்த செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்குகிறது என்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி ஆகும்.

வீடியோ கேமரா
இதனை கடந்த 4-ம் தேதி நம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.. இப்போது இதன் பயன்பாடுகள், செயல்படுத்துவது எப்படி என்பது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ மூலம் விளக்கி உள்ளார்.. அந்த வீடியோவில் சைலேந்திபாபு பேசியுள்ளதாவது: "ஆபத்துக் காலங்களில் இந்த ஆப்பில் உள்ள பட்டனை அழுத்தி வீடியோ கேமரா மூலம் சம்பவ இடத்தில் நடக்கும் அசம்பாவிதங்களை கன்ட்ரோல் ரூமுக்கு நேரடியாக காட்டலாம்.. பட்டனை மட்டும் அழுத்தினால் போதும்.. காவல் உதவி செயலி உடனே டவுன்லோடு ஆகிவிடும்.. உடனே உதவியையும் கோர முடியும்.

வாட்ஸ்அப் க்ரூப்
வேலைக்கு போகும் இளம்பெண்கள் இந்த ஆப் மூலம் உதவி கோரி தங்கள் பாதுகாப்பை இரவிலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.. தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்து இளம் பெண்கள் தங்கள் இருப்பிடத்தை அவர்கள் கண்காணிக்கும்படியான வசதிகளையும் இந்த ஆப் மூலம் போலீஸார் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.. 100, 101, 112 என பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான அனைத்து அவசர உதவி எண்களையும் இந்த ஆப் மூலமாகவே அழைத்து உதவி கோர முடியும்.

சைபர் குற்றங்கள்
சாலை விதி மீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத் தொகையையும் இந்த செயலி மூலமே பொதுமக்கள் செலுத்திக்கொள்ள முடியும்.. இழந்த பணத்தை மீட்க இயலும், பொதுமக்கள் அதிகம் ஏமாறும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களையும் சைபர் காவல் நிலையங்களைத் தேடி அலையாமல் இந்த ஆப் மூலம் அழைத்து உதவி கோரி இழந்த பணத்தை மீட்க இயலும்.. வெளியூருக்கு போனாலோ, அல்லது பிறருக்கோ ஏற்படும் விபத்து போன்ற அசம்பாவிதங்களைக் கூட இந்த ஆப் மூலமே அழைத்து உதவி கோர முடியும். மொத்தத்தில் ஃபுல் பவர் உங்களிடமே உள்ளது.. அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

60 உதவிகள்
37 மாவட்டங்களின் காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்கள், அங்கு செல்வதற்கான கூகுல் மேப் போன்ற 60 அத்தியாவசிய உதவிகளை உள்ளடக்கிய காவல் உதவி செயலியைத் தமிழ்நாடு காவல்துறை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ளது.. இதை அனைவருமே பதிவிறக்கம் செய்து முழு பயனடைய வேண்டும்" என்று டிஜிபி சைலேந்திர பாபு அந்த வீடியோவில் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications