விண்ணில் பாயும் சந்திரயான் 3: திக் திக் எதிர்பார்ப்பு! மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை! ஏன் தெரியுமா?
சென்னை: இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால் கடலுக்குச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2:35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. சந்திரயான் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகளும் சோதனை ஓட்டங்களும் முடிவடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளும் முடிவடைந்துள்ளன.

சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்3எம்4 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் தொடங்கியது. அதன்படி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் சந்திராயன் 3 விண்கலம் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் இன்று ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று சென்னை பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வள கூட்டுறவு சங்கங்கள் மூலம் திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதையடுத்து, பழவேற்காடு பகுதி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3 வானில் ஒரு மாத பயணத்திற்கு பின் ஆகஸ்ட் மாதத்தில் நிலவை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும். இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், சந்திரயான்-3 அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications