Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக போட்ட வழக்கு.. சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட அமுதா ஐஏஎஸ் உள்பட 5 அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர்.

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில் புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை அப்புறப்படுத்த கோரி பாஜகவின் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

Five IAS Officers Appear Before Madras High Court Apologize in BJP s Contempt Case

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்தப் பள்ளியை அப்புறப்படுத்தி அந்த இடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். என்றும், பள்ளிக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, அறநிலையத் துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார், அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக பாஜகவின் ஆன்மீக கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசின் வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தனர்.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, "புவனகிரி தாலுகா பெரியபட்டு கிராமத்தில் அந்த பள்ளிக்கு 4.73 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது" என்று தெரிவித்தார். ஆனால் அந்த பள்ளி தரப்பில், "32 கிலோ ட்டர் தூரத்தில் அமைந்துள்ள அந்த இடத்தில் சாலை வசதி ஏதும் இல்லை. ஆகையால், கடலூர் நகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலம் ஒதுக்கி தர வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் ரவீந்திரன், பிரதான சாலையில் இருந்து குறிப்பிட்ட அந்த நிலத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து புதிய இடத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்க கோரி அரசுக்கு விண்ணப்பம் கொடுக்க பள்ளி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறை செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+