சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பிதான்.. சென்னை ஈசிஆரில் வருகிறது மிதக்கும் உணவகம்..அப்படி என்ன ஸ்பெஷல்?
டெல்லி: சென்னை ஈசிஆரில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக பிரமாண்ட மிதவை உணவக கப்பல் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த மிதக்கும் கப்பல் தயராகிவிடும் என்றும் 100 பேர் அமர்ந்து பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு என்ற இடம் உள்ளது. இங்கு படகோட்டுதல் உள்ளிட்ட உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.
சென்னை மக்களுக்கு வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் பொழுதை கழிப்பதற்கான முக்கியமான சுற்றுலா தளமாக இப்பகுதி அமைந்துள்ளது.

மிதவை உணவக கப்பல்
முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் உள்ளிட்டவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுற்றுலாப்பயணிகளை மேலும் கவரும் விதமாக மிதவை உணவக கப்பல் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த மிதக்கும் கப்பல் தயராகிவிடும் என்றும் 100 பேர் அமர்ந்து பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 கோடி மதிப்பில்..
இதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் மூலம் ரூ.5 கோடி மதிப்பில் மிதவை உணவக கப்பல் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்படி உணவக கப்பல் அமைவது இதுவே முதல் தடவையாகும். இந்த உணவக கப்பலுக்கான கட்டுமான பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கிவைத்தார்.

குளிரூட்டப்பட்ட வசதியுடன்
இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைகிறது. முதல் தளம் திறந்த வெளியாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையிலும் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. இந்தக் கப்பலில் சமையல் அறை, சேமிப்பறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்படுகிறது. இந்த மிதவைக் கப்பல் இந்த மிதவைக்கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக
2 அடுக்குகளை கொண்ட இந்த உணவக பயண கப்பலின் மொத்த நீளம் 125 அடி, அகலம் 25 அடி ஆகும். தமிழகத்தில் முதல் முறையாக அமையும் இந்த உணவக கப்பல் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டுக்காடு பகுதியில் வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் இந்த உணவக கப்பல் இருக்கும் என்றும் இயற்கை சூழலில் இருந்தபடி கப்பல் உணவகத்தில் உணவு சாப்பிட்டு பொழுதை போக்குவது புதுவிதமான அனுபவமாக இருக்கும் என்றும் சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications