ரூ.2000 வெள்ள நிவாரணம் டோக்கன் விநியோகம் தொடங்கியது.. 4 நாட்களுக்குள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்!
சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை செயலர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகிறது, டோக்கன் வழங்கப்பட்ட 3 முதல் 4 நாட்களில் நாட்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30 ஆம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மழைநீர் பல்வேறு பகுதியில் தேங்கி நின்றதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

கனமழை காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஃபெஞ்சல் புயலால் அதிகமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதேபோல திருவண்ணாமலை, கடலூர் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்; அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரேஷன் கார்டு அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
2,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் 2000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் அறிவித்த ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் மற்ற இடங்களில் இன்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
படிப்படியாக ஓரிரு நாட்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு 3 அல்லது 4 நாட்களுக்குள் நிவாரண தொகை முழுமையாக வழங்கப்பட்டு விடும் என்றும் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications