இந்த பொறப்புதான் நல்லா ருசித்து சாப்பிட கிடைத்தது.. சென்னை உணவுத்திருவிழாவுக்கு இன்று என்ட்கார்டு
சென்னை: உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னையில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய உணவுத் திருவிழா இன்று முடிவடைகிறது. இந்த திருவிழாவில் தமிழகம், வெளிமாநிலம், வெளிநாட்டு உணவு வகைகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செப்டம்பர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடலில் சிங்கார சென்னையில் சிறுதானியம், உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

இதற்காக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாரம்பரிய சிறுதானிய உணவுகளுக்காக 30 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அசைவம் மற்றும் சைவ உணவுகள் கிடைக்கும். தென்னிந்திய மற்றும் வடஇந்திய உணவுகள், தாய்லாந்து, மலேசியா உணவு வகைகளும் கிடைக்கும்.
இந்த திருவிழா இந்த 3 நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதற்கான நுழைவுக் கட்டணமாக ரூ 10 சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வசூலிக்கப்படுகிறது. இந்த உணவுத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இங்கு விற்கப்படும் உணவுகளின் விலை வழக்கமாக அந்தந்த ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் விலையை விட மலிவாக இருக்கும் என தெரிகிறது. அது போல் மீன்வளத் துறை சார்பில் மீன் உணவுகளும் மலிவாக விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த உணவு திருவிழா தொடங்கிய 16 ஆம் தேதி முதல் பொதுமக்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த உணவுத் திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications