சென்னையில் இருந்தபடியே.. அமெரிக்காவை இயக்கும் "மூளைகள்".. தமிழ்நாட்டிற்கு சிலிர்க்க வைக்கும் பெருமை
சென்னை: ஆகஸ்ட் 2022 இல், ஃபோர்டு மோட்டார் நிறுவனம் (ஃபோர்டு) அதன் உற்பத்தி அலகுகளை முடித்துக்கொண்டு இந்தியாவில் உள்ள சென்னை ஆலையில் இருந்து வெளியேறியது. இப்போது, உலகளாவிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு சென்னையில் அதன் யூனிட்டை மூடிவிட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அதே நகரம், ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் (FBS) மூலம் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் அனைத்து மாடல்களின் முக்கிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களின் பின்னணியில் சென்னையில் உள்ள ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் மூளையாக இருப்பதை நிரூபித்துள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் F-Series, Explorer, Transit, Ranger உட்பட, அந்த நிறுவனத்தின் உலகளவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எல்லாம் சென்னையில் டிசைன் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக மையத்தில் 12,000 பணியாளர்கள் மூலம் நிறுவனத்தின் வடிவமைப்புகளை உருவாக்குகிறது. கணினி உதவி வடிவமைப்பு (CAD), கணினி உதவி பொறியியல் (CAE) மற்றும் மென்பொருள் மேம்பாடு ஆகியவற்றில் ஃபோர்டு குழுவிற்கு சென்னையில் FBS குழு உதவுகிறது.

மீண்டு வருது: இது ஒரு பக்கம் இருக்க , சென்னையில் மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தில் போர்ட் நிறுவனம் இறங்கி உள்ளதாக உள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் முக்கிய அறிவிப்புகள் வரும் என்று கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் போர்ட் நிறுவனத்தின் அமெரிக்க டீம் ஆலோசனை செய்துள்ளது.
போர்டு நிறுவனம் இந்தியாவில் Mustang Mach-E வாகனத்தின் டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது. இது இந்திய சந்தையில் போர்ட் மீண்டும் நுழைவதை உறுதி செய்துள்ளது. அடுத்த தலைமுறை எண்டெவர் கார்கள் இதன் மூலம் போர்ட் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.
Ford நிறுவனம் முதலீடுகள்; அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. ஆனாலும் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

தொழிற்சாலை மூடல்: தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் . என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் போர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே சிப் உற்பத்தி, செமி கண்டக்டர் உற்பத்தி, டாடாவின் பேட்டரி கார்கள் உற்பத்தி ஆலையை தொடங்குவது பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.. ஆனால் இந்த சந்திப்பு பெரிதாக பலன் அளிக்கவில்லை.
இதற்காக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த தொழிற்சாலையை வாங்குவதற்கான கடைசி கட்ட பேச்சுவார்த்தைகள் கூட நடைபெற்றன. ஆனால் கடைசியில் டாட்டா நிறுவனம் குஜராத்தில் இருக்கும் போர்ட் நிறுவனத்தை வாங்கிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை மறைமலை நகரில் உள்ள போர்ட் ஆலை யாராலும் வாங்கப்படாமல் முடங்கியது. இதையடுத்து இந்த இடத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்யவும் ஆலோசனை செய்யப்பட்டது.
பிஒய்டி நிறுவனம் : அதே சமயம் மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமும் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியது. சென்னை மறைமலைநகர் போர்ட் தொழிற்சாலையை வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு தொழிற்துறை சில பெரிய நிறுவனங்களுடன் பேசி வருகிறதாம். சில "பிக் நேம்" அதாவது பெரிய நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்த தொழிற்சாலையை வாங்க உள்ளதாக கூறப்பட்டது.
பிஒய்டி சீனாவில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது போர்ட் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.

எந்த நிறுவனம்: இந்த நிலையில்தான் இதில் JSW-MG குழு இந்த தொழிற்சாலையை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தன. இந்தியாவில் அவர்கள் விற்பனையை விரிவுபடுத்த உள்ள நிலையில், போர்ட் தொழிற்சாலையை வாங்க ஆலோசனை செய்து வந்ததாம் . அப்படி அந்த நிறுவனம் வரும் பட்சத்தில் அது தமிழ்நாட்டிற்கும், சென்னைக்கும் மிகப்பெரிய குட் நியூஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது;.
இப்படிப்பட்ட நிலையில்தான் போர்ட் நிறுவனம் அந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி உள்ளதாம். தொழிற்சாலையை விற்க வேண்டாம் என்ற திட்டத்திற்கு போர்ட் நிறுவனம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தில் போர்ட் நிறுவனம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மீண்டும் இந்திய உற்பத்தி மார்கெட்டிற்கு போர்ட் நிறுவனம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் போர்ட் நிறுவனத்தின் அமெரிக்க டீம் ஆலோசனை செய்துள்ளது. போர்ட் அதிகாரி கே ஹார்ட் தலைமையில் குழுவினர் நேற்று தமிழ்நாடு அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்துள்ளனர்.
மீண்டும் இங்கே உற்பத்தியை தொடங்க வாய்ப்பு உள்ளதாக போர்ட் நிறுவன வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வருகின்றன. பெரும்பாலும் Mustang Mach-E வாகனத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications