நீலாங்கரை டூ அக்கரை.. அடுத்தடுத்து கரை ஒதுங்கிய ஆமைகள்.. கழுத்தில் அது என்ன 'டேக்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நீலாங்கரையில் இருந்து அக்கரை வரை கடலோர பகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும் ஏராளமான ஆமைகள் கடலில் கரை ஒதுங்கின. இதில் அழிந்து வரும் பச்சை கடல் ஆமையும் அடங்கும். உத்தண்டி பகுதி யில் இறந்து கிடக்கும் ஆமை களால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். உயிரிழந்த ஆமைகளின் கழுத்தில் 'டேக்' கட்டப்பட்டு இருப்பதால் வெளி மாநிலங்கள் அல்லது வெளி நாட்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக வங்கக்கடலில், குறிப்பாகச் சென்னைக் கடற்கரைகளில் மெரினா முதல் நீலாங்கரை, கோவளம் வரை ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஆலிவ் ரிட்லி வகையிலான ஆமைகள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்குவது சுற்றுச்சூழல் ஆர்வல்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.

Foreign turtles washed ashore along the coastal area from Neelankarai to Akkarai

நுரையீரலில் சுவாசிக்கும் உயிரினம்

கடலில் வாழும் ஆமைகள் நுரையீரலால் சுவாசிக்கும் ஊர்வன இனத்தைச் சேர்ந்தவை ஆகும். அவை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒருமுறை கடல் மட்டத்திற்கு மேலே வந்து காற்றைச் சுவாசிக்க வேண்டும். அப்போது மீனவர்கள் தங்கள் இழுவலைகள் மற்றும் பெரிய மீன்பிடி வலைகளில் மீன் பிடிக்கும் ஆமைகள் எதிர்பாராமல் சிக்கிக்கொள்கின்றன. இதனால் அவற்றால் மேலே வர முடிவதில்லை. இதனால் நீரில் மூழ்கி (Drowning) அல்லது மூச்சுத்திணறி இறந்து போகின்றன.

'டெட்' கருவி வேண்டும்

இதற்காக 'டெட்' கருவி பயன்படுத்த வேண்டும். Turtle Excluder Device என்ற கருவி இது விசைப்படகுகளின் வலைகளில் பொருத்தப்பட வேண்டிய ஒரு பாதுகாப்புக் கருவியாகும். இந்த கருவி இருந்தால் வலைக்குள் சிக்கும் ஆமைகள் அதிலிருந்து தப்பித்து வெளியேறிவிட முடியும்.பல விசைப்படகுகளில் இந்தக் கருவி பொருத்தப்படாதது ஆமைகளின் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கிறார்கள்.

ஜெல்லி பிஷ் என்று நினைக்கிறது

அதேபோல் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் பைகளை ஆமைகள் தங்களுக்குப் பிடித்த உணவான 'ஜெல்லி பிஷ்' சாப்பிடுகின்றன.அதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு ஆமைகள் மெல்ல மெல்ல உயிரிழக்கின்றன. கடற்கரைகளில் அமைக்கப்படும் கருங்கல் தடுப்புகள் ஆமைகள் முட்டையிடக் கரை ஏறுவதைத் தடுப்பதாகவும் சொல்கிறார்கள். அதேபோல் வங்க கடலில் அதிகப்படியான மின்விளக்கு வெளிச்சம் ஆமைகளைத் திசைதிருப்புவதாகவும், இதனால் அவை குழப்பமடைந்து கடலுக்குத் திரும்புவதில் சிரமப்பட்டு இறக்க நேரிடுகிறது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

ஆந்திரா ஒடிசா கடற்கரையில் ஆமைகள்

அதேபோல் ஆந்திரா அல்லது ஒடிசா கடற்பகுதிகளில் உயிரிழந்த ஆமைகள், கடலின் நீரோட்டம் மற்றும் சீற்றம் காரணமாகத் தள்ளப்பட்டுச் சென்னைக் கடற்கரைகளில் கரை ஒதுங்குவதும் நடக்கிறது. இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் இருந்து உத்தண்டி, அக்கரை வரையிலான கடலோர பகுதியில் கடந்த சில தினங்களில் மட்டும் 10 முதல் 15 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தன. இதில் அழிந்து வரும் பச்சை கடல் ஆமையும் உள்ளன. உத்தண்டி பகுதி யில் இறந்து கிடக்கும் ஆமை களால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

வனத்துறை அதிகாரிகள் தகவல்

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அதிகரித்து வரும் ஆமைகள் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த கடல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம். இதற்காக ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புற அறிகுறிகளை ஆராயும்போது இறந்து கிடந்த ஆமைகளில் பெரும்பாலானவை ஆண் ஆமைகள் என்பதை கண்டுபிடித்துள்ளோம். அவை மீன்பிடி வலைகளில் சிக்கி மீண்டு வரமுடியாமல் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நினைக்கிறோம்" என்றார். சென்னை நீலாங்கரைக்கும், கோவளத்துக்கும் இடையிலான பகுதியில் 200-க்கும் அதிகமான ஆமைகள் இறந்து இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. உயிரிழந்த ஆமைகளின் கழுத்தில் 'டேக்' கட்டப்பட்டு இருப்பதால் வெளி மாநிலங்கள் அல்லது வெளி நாட்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+